தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவுக்கு கடந்த சில வருடங்களாகவே வாய்ப்புகள் வருவது குறைந்துவிட்டது. இருப்பினும் அவர் நடித்த ஒன்றிரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது. இவ்வாறு மார்க்கெட் குறைந்த நடிகைகள் என்ன முடிவெடுப்பார்களோ அதே போன்று ஹன்சிகாவும் திருமணம் செய்து கொண்டார்.
ஒரு தொழிலதிபரை காதலித்து வந்த ஹன்சிகா சில வாரங்களுக்கு முன்பு கோலாகலமாக அவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் நடித்து வந்த ஒரு படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த ஆர் கண்ணன் இப்போது ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதில் தான் ஹன்சிகா ஹீரோயின் ஆக நடிக்கிறார்.
Also read: ஹன்சிகாவின் கேரியருக்கு வந்த ஆபத்து.. இந்த ஒரே காரணத்தால் அதலபாதாளத்திற்கு செல்ல போகும் மார்க்கெட்
பெயரிடப்படாமல் இருந்த அந்த படத்திற்கு தற்போது காந்தாரி என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த போஸ்டரில் ஹன்சிகா காஞ்சனா பட பாணியில் படு ஆக்ரோஷமாக இருக்கிறார். கருப்பு புடவை அணிந்து தலை முடியை விரித்து போட்டு வெறித்தனமான பார்வையுடன் அவர் சிம்மாசனம் போன்ற இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்த கெட்டப் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.
திருமணத்திற்குப் பிறகு ஆக்ரோஷமாக மாறிய ஹன்சிகா
![hansika-kandhari](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/12/hansika-kandhari.jpg)
ஏற்கனவே இவர் அரண்மனை திரைப்படத்தில் பேயாக வந்து மிரட்டி இருந்தார். அதைத்தொடர்ந்து இந்த படத்திலும் அவர் வியக்க வைக்கும் ஒரு கேரக்டரில் தான் நடித்திருக்கிறார் என்பது போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. மேலும் திருமணத்திற்கு பிறகு இந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது. தன் அழகு மனைவியின் இந்த புது அவதாரத்தை பார்த்து நிச்சயம் ஹன்சிகாவின் கணவர் மிரண்டு தான் போயிருப்பார்.
அது மட்டுமல்லாமல் படத்தின் பெயரும் சமீபத்தில் வெளிவந்த காந்தாரா படத்தை நினைவுபடுத்துகிறது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி அனைவரையும் மிரள விட்டது. அதேபோன்று வெளியாகி இருக்கும் இந்த காந்தாரி ரசிகர்களின் கவனத்தை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.