தமிழ் சினிமாவில் பம்ப்ளிமாஸ் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா. ரசிகர்களால் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்பட்டார். அறிமுகமான தொடக்கத்திலேயே தனுஷ், விஜய், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஹன்சிகா அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். பார்ப்பதற்கு குஷ்பு போல கொழுக் மொழுக் என இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
ஆனால் சமீபகாலமாக இவரது படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதேபோல் இவருக்கும் சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. இறுதியாக அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். அதனை அடுத்து தற்போது ஹன்சிகா நடிப்பில் மஹா என்ற படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஹன்சிகாவுடன் அவரது முன்னாள் காதலரும், நடிகருமான சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் இப்படம் ஹன்சிகாவிற்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா தற்போது ‘105 மினிட்ஸ்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. ராஜா துஸ்ஸா இப்படத்தை இயக்கி உள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இப்படம் குறித்து பேசிய ஹன்சிகா, “உலக ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. எனவே படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தை சர்வதேச அளவில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதனால் இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய மொழிகளைத் தவிர சைனீஸ் கொரிய உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.
மேலும் உலகில் ஒரே ஒரு கதாபாத்திரம் கொண்டு உருவாக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இப்படம் வெறும் ஆறே நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 20 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய ஐந்து முதல் ஆறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன” என கூறியுள்ளார். எனவே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.