திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அரை டிராயருடன் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா மோத்வானி.. கண்ணாடியில் தெரிந்த போட்டோகிராபர்

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால் அதற்கு முன்னரே ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துவிட்டார். தமிழ் சினிமாவில் இவருக்கு முதல் படம் பெரிய அளவில் கைகொடுக்காமல் விட்டாலும் அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.

ஒரு காலத்தில் ஹன்சிகா தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகின. அதுவும் சுந்தர் சி இவரை விடவே இல்லை தொடர்ந்து அவரது படங்கள் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பை வாரி வழங்கி வந்தார்.

அதன் பிறகு வாலு படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த உடன் சிம்புவும் இவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. யார் கண்ணு பட்டுச்சோ என்னமோ தெரியவில்லை. பின்பு இவருக்கு எந்த ஒரு படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

hansika motwani
hansika motwani

அதற்கு காரணம் அவருடைய உடல் எடை அதிகரிப்பு தான் என ஒரு தரப்பினர் கூறி வந்தனர். அதனால் தொடர்ந்து ஜிம்முக்கு சென்று தனது உடல் எடையை குறைத்து தினந்தோறும் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பதால் சமீபகாலமாக ஹன்சிகா மோத்வானி சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். முழுக்கை சட்டை உடன் அரை டிராயருடன் அந்த புகைப்படம் வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Trending News