திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

ஒரே ஒரு புகைப்படத்தால் வந்த சிக்கல்.. ஹன்சிகாவை நெருங்கிய போலிஸ்

தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்படுபவர் ஹன்சிகா மோத்வானி. ஏனென்றால் குஷ்புவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் கொழுக்கு மொழுக்கு என இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. அதனால் பலரும் சின்ன குஷ்பு என அழைத்தனர்.

ஒரு காலத்தில் சுந்தர் சி இயக்கும் படங்கள் அனைத்திலும் ஹன்சிகா மோத்வானி நடிக்க வைத்து விடுவார். அதனால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அதிகமான படங்களில் நடிக்கக் கூட நடிகையாக உருவானார். சமீபகாலமாக தேர்ந்தெடுக்கும் கதைகள் பெரிய அளவில் வரவேற்பு பெறாததால் தற்போது தமிழ் சினிமாவை விட்டு இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹன்சிகா மோத்வானி அண்ணனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. ராஜஸ்தான் உதய்பூர் தி ராயல் ரீட் என்ற 7 நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தியதாக ஹன்சிகா மோத்வானி தெரிவித்திருந்தார்.

hansika motwani
hansika motwani

ஆனால் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அண்ணனின் திருமண வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் அவரது உறவினர்களும் நட்சத்திர ஹோட்டலில் பங்கேற்றுள்ளனர் அதில் யாரும் முகக் கவசம் அணியாமல் விழாவை சிறப்பித்துள்ளனர் மேலும் நட்சத்திர ஹோட்டலில் நீச்சல்குளத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி முத்தமிடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அதில் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்பதும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறைப்படி கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீச்சல் குளத்தில் யாரும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்க கூடாது எப்படி ஹோட்டல் நிர்வாகம் நீச்சல் குளத்திற்கு அனுமதி அளித்தது என பல்வேறு விதமான கேள்விகள் எழுந்துள்ளன.

இதனால் தற்போது முதலில் ஹன்சிகா மோத்வானி குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் கலந்து கொண்டார்கள் என கூறிவிட்டு தற்போது இந்த வீடியோ மூலம் அதிகமான நபர் காணப்பட்டதால் தான் இந்த பிரச்சனை என கூறியுள்ளனர். மேலும் இது குறித்து போலிஸ் விசாரணை வேறு நடக்க போகிறதாம்.

Trending News