திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

புதிய படத்தில் நடிக்கும் ஹன்சிகா மோத்வானி.. ஜோடி சேர துடிக்கும் நடிகர்

நடிகை ஹன்சிகாவின் 50வது படமான மகா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஹன்சிகாவின் முன்னாள் காதலரான சிம்பு இப்படத்தில் நடித்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில் ஹன்சிகாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆனால், தமிழில் அல்ல தெலுங்கில் உருவாக உள்ளது. இப்படத்திற்கு “மை நேம் இஸ் ஸ்ருதி” என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்ரீநிவாஸ் ஓம்கார் என்பவர் இயக்க உள்ளதாகவும், மார்க் ராபின் என்பவர் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

hansika motwani
hansika motwani

மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவருக்கு நெருக்கமான நடிகர் ஒருவர்தான் இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி ஜோடி சேர இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

Trending News