குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமான ஹன்சிகா வந்த புதிதிலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இதுவரை தமிழில் கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துள்ளார். கடைசியாக ஹன்சிகா நடிப்பில் தமிழில் மகா படம் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஹன்சிகா பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதாவது நடிகர் சிம்புவை காதலித்து வந்த ஹன்சிகா சில காரணங்களினால் அவரை பிரேக்கப் செய்தார். இதைத்தொடர்ந்து மகா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருந்தார்.
Also Read :அரண்மனையில் நடக்கவுள்ள ஹன்சிகா திருமணம்.. புதுமாப்பிள்ளைக்கு தடபுடலாக நடக்கும் ஏற்பாடு
இதைத்தொடர்ந்து மீண்டும் சிம்புவுடன் ஹன்சிகா இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தனது நீண்ட கால நண்பரை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதாவது தொழில்பர் சோஹைல் கதுரியா என்பவரை டிசம்பர் மாதம் ஹன்சிகா திருமணம் செய்ய உள்ளார்.
இவர்களது திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதற்காக மிகவும் பழமையான அந்த அரண்மனையை தற்போது புதுப்பித்து வருகிறார்களாம். மேலும் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி ஹன்சிகாவின் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் டிசம்பர் 2 ஆம் தேதியே தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Also Read :கொழுகொழுன்னு இருந்த நம்ம ஹன்சிகாவா இது? எலும்பும் தோலுமாக மாறிய லேட்டஸ்ட் போடோஸ்!
ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ளும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதுவரை அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஹன்சிகாவுடன் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் எங்களை ஏமாற்றி விட்டாய் ஹன்சிகா என இந்த புகைப்படத்தை பார்த்து புலம்பி தவிக்கிறார்கள்.
வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்யும் ஹன்சிகா

சந்தோஷத்தில் ஹன்சிகா

Also Read :விஜய்யின் குடும்ப குத்துவிளக்கு ஹன்சிகாவா இது.. உடல் எடை மெலிந்து செம க்யூட்டான புகைப்படங்கள்