செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

தோழியின் கணவரை வளைத்துப் போட்ட ஹன்சிகா.. வருங்கால கணவர் முதல் மனைவியுடன் இருக்கும் வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகா சமீப காலமாக அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை. சமீபத்தில் அவர் நடித்த மகா திரைப்படமும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நடக்க இருக்கும் செய்தியை ஹன்சிகா சோசியல் மீடியாவில் போட்டோவுடன் வெளியிட்டார்.

அந்த வகையில் ஹன்சிகா தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை காதலித்து கரம் பிடிக்க இருக்கிறார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. விரைவில் அதற்கான திருமண தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.

Also read : வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்யும் ஹன்சிகா.. வைரலாகும் போட்டோஸ்

அதிலும் அவரின் முதல் மனைவி ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என்பதுதான் அதிர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த திருமண விழாவில் ஹன்சிகா கலந்து கொண்டு ஆடி பாடி மகிழ்ந்திருக்கிறார். ஹன்சிகாவின் தோழி ரிங்கி என்பவரை தான் சோஹேல் கதூரியா ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து இருக்கிறார்.

ஹன்சிகாவின் வருங்கால கணவர் முதல் மனைவியுடன் இருக்கும் புகைப்படம்

hansika-actress
hansika-actress

அதன் பிறகு அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கிறது. பின்னர் சோஹேல் கதூரியா, ஹன்சிகாவுடன் மிகவும் நெருக்கமாக பழகி இருக்கிறார். சில வருடங்கள் நீடித்த இந்த காதல் தற்போது திருமணம் வரை வந்திருக்கிறது. தற்போது ஹன்சிகா தன் தோழியின் கணவரை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read : அரண்மனையில் நடக்கவுள்ள ஹன்சிகா திருமணம்.. புதுமாப்பிள்ளைக்கு தடபுடலாக நடக்கும் ஏற்பாடு

மேலும் ஹன்சிகா தன் தோழியின் கூட இருந்தே குழி பறித்து விட்டாரா போன்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது. ஏற்கனவே ஹன்சிகா நடிகர் சிம்புவை காதலித்து பிரேக் அப் செய்தார். அதை தொடர்ந்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர் இப்படி ஒரு வேலையையும் பார்த்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

இருப்பினும் இது அவர்களுடைய சொந்த விஷயம் என்று கூறும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை ஹன்சிகாவுக்கு தெரிவித்து வருகின்றனர். தற்போது ஹன்சிகாவின் வருங்கால கணவர் முதல் மனைவியுடன் இருக்கும் அந்த திருமண புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Also read : கொழுகொழுன்னு இருந்த நம்ம ஹன்சிகாவா இது? எலும்பும் தோலுமாக மாறிய லேட்டஸ்ட் போடோஸ்!

Trending News