வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மீண்டும் தமிழ் படத்தில் இணையும் ஹர்பஜன் சிங்.. எந்த படம் தெரியுமா?

1998 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ஹர்பஜன் சிங், 2016 ஆம் ஆண்டு வரையில் விளையாடினார். அதன்பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற அவர், மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய ஆட்டக்காரராக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழில் Friendship என்று ஒரு படத்தில் நடித்தார். அது எதிர்பார்த்த அளவில் வெற்றி என்று சொல்லமுடியவில்லை என்றாலும் ரசிகர்களை கவர்ந்த ஒரு படமாக தான் உள்ளது. மேலும், டிக்கிலோனா என்ற படத்தில் கேமியோ ரோலிலும் இடம்பெற்றார் ஹர்பஜன் சிங்.

தமிழ் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்

பொதுவாக கிரிக்கெட் வீரர்களை சினிமாக்களில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வம் காட்டினாலும், அது நடப்பது அரிது. அப்படி இருக்க, கிரிக்கெட்டில் மட்டுமே இவரை பார்த்த ரசிகர்களுக்கு சினிமாவில் பார்த்தபோது மிகவும் புதியதாக இருந்தது.

இவருக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம். தன்னுடைய x தளத்தில் கூட தமிழிலே பதிவிடுவார். இந்த நிலையில் அடுத்ததாக ஒரு தமிழ் படத்தில் இவர் கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் தமிழில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அந்த பதிவில், “என் தங்க தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். என்னோட அடுத்த தமிழ் படம் #Savior. உங்கள மகிழ்விக்க வரப்போகுது. உங்க அன்புக்காக வெயிட்டிங்” என்று பதிவிட்டுள்ளார்.

சேவியர் எனும் படத்தில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து, ஓவியா, vtv கணேஷ், சிங்கம்புலி, ஜிபி முத்து போன்றோர் ஒன்றிணைத்துள்ளனர். இது ரசிகர்களுக்கு காமெடி கலந்த படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News