வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

படத்தை விளம்பரப்படுத்துவதில் விஜய்யை ஓரம்கட்டிய ஹர்பஜன்.. சிங்கு பலே கில்லாடிதான் பா!

தமிழ் சினிமாவில் அறிமுக நாயகனாக களத்தில் இறங்கியுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். இவரது நடிப்பில் தற்போது பிரெண்ட்ஷிப் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் ஹர்பஜன் சிங் நடித்த பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் ஹர்பஜன் சிங்குடன் சதீஷ் மற்றும் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபகாலமாக ஹர்பஜன்சிங் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வபோது தமிழில் குசும்பு தனமாக ஏதாவது ட்விட் செய்து ரசிகர்களிடம் பாராட்டு பெறுவது வாடிக்கையாக வைத்திருந்தார்.

தற்போது இவரது நடிப்பில் வெளியாகவுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் ப்ரோமோஷன் வேலைக்காக களத்தில் இறங்கியுள்ளார் ஹர்பஜன் சிங். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது அதிக ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் தான்.

தமிழ் சினிமாவில் எந்த படம் வெளிவந்தாலும் விஜய் பற்றிய வசனமோ அல்லது அஜித் பற்றிய புகைப்படமோ ஏதாவது ஒன்றை படத்தில் வைத்து அந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

harbhajan singh cinemapettai
harbhajan singh cinemapettai

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற “வாத்தி கம்மிங்” பாடலுக்கு ஷில்பா ஷெட்டி, ஹர்திக் பாண்டியா மற்றும் அஸ்வின் உட்பட பல பிரபலங்களும் நடனமாடி இருந்தனர். ஆனால் ஹர்பஜன்சிங் அந்த பாடலுக்கு நடனம் ஆடாமல் இருந்தார்.

தற்போது பிரண்ட்ஷிப் படம் விரைவில் வெளியாக உள்ளதால் இப்படத்தினை எப்படியாவது சமூகவலைதளத்தில் டிரெண்டிங் செய்துவிட வேண்டும் என்பதற்காக விஜய் நடிப்பில் உருவான வாத்தி கம்மிங் பாடலுக்கு தற்போது ஹர்பஜன் சிங் நடனமாடி  வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்க்கும் போதே தெரிகிறது படத்தின் புரமோஷனுக்காக இந்த செயலை செய்துள்ளார் என பல ரசிகர்கள் வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஹர்பஜன் சிங் திருவள்ளுவர் கன்சல்டன்சி என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News