சாதாரண சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் திரையுலகில் கால்பதித்த நடிகர் சந்தானம் அதன்பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னரே தமிழ் சினிமாவில் சந்தானத்திற்கு நிரந்தரமான அங்கீகாரம் கிடைத்தது. ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சந்தானம், ஒரு கட்டத்திற்கு பின்னர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.
பல முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களில் சந்தானத்தை ஒப்பந்தம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். சந்தானம் இல்லாத படங்களே இல்லை என்ற நிலையும் உருவானது. ஹீரோக்களைவிட சந்தானம் அதிகளவிலான படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது.
ஆனால் எவ்வளவு நாள் தான் நானும் காமெடியனாவே இருக்கறது. இனிமே நடிச்சா ஹீரோ தான் என கூறி திடீரென அதிரடி முடிவை எடுத்தார் .அதன்படி கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். இவரது படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும், ஓரளவிற்கு ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள புதிய படம் தான் டிக்கிலோனா. இப்படத்தில் சந்தானத்துடன், யோகிபாபு, ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இணைந்துள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. மூன்று வேடங்களில் சந்தானம் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இவர்களை தவிர இப்படத்தில் மேலும் ஒரு சிறப்பம்சமாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை ஹர்பஜன் சிங்கே தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து, “இந்த வெட்டு புலிக்கு ஏத்த வெட்டு கிளி பார்த்தா @iamsanthanam ஜீ.எப்பிடி இருக்கீங்க.#Dikkilona படம் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!.படம் ரிலீஸ்க்கு ரெடி.நான் இதுல யாருன்னா நீங்களே பாருங்க #DikkiloonaFromSep10 @kjr_studios” என பதிவிட்டுள்ளார்.