தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தலின் போது ஹரி நாடார் என்பவரை மக்களுக்கு தெரியும். பனங்காட்டு கட்சியின் தலைவரான ஹரி நாடார் தேர்தலின் போது பல கட்சிகள் விமர்சித்து வாக்குகளை சேகரித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் 37000 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மீண்டும் அவர் தொழில் துறையில் கவனம் செலுத்தினார்.
ஆனால் ஹரிநாடார் மீது மோசடி வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவரிடம் வங்கியில் 360 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி உள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ஹரி நாடார் கும்பல் பல தொழில் அதிபர்களுக்கும் கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஹரி நாடார் அணிந்திருந்த 893 கிராம் எடையுள்ள 2 கோடி மதிப்பிலான நகை மற்றும் கார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல அவரது நண்பர் ரஞ்சித் என்பவரிடம் போலீசார் 140 கிராம் எடையுள்ள 10 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் பலர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் கண்டுபிடிக்கபடுவார்கள் எனவும் போலீசார் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.