நடமாடும் நகை கடை ரேஞ்சுக்கு வலம் வந்தவர் தான் ஹரி நாடார். அவரது உடல் எடையை விட அவர் அணிந்திருக்கும் நகைகளின் எடை அதிகமாக இருக்கும். நகைகள் விஷயத்தில் பெண்களையே ஓரங்கட்டி விடுவார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான ஹரிநாடார் சமீபத்தில் சொந்தமாக கட்சி ஆரம்பித்து வெற்றிக்கு மிக அருகில் சென்று கோட்டை விட்டார். அந்தக் கட்சிக்கு பனங்காட்டுப்படை எனவும் பெயர் வைத்திருந்தார்.
அவர் அரசியலில் நுழைந்ததற்கு காரணமே தான் செய்த பல விஷயங்கள் போலீசுக்கு தெரிந்து விரைவில் நம்மை கைது செய்து விடுவார்கள், அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள அரசியல் நமக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும் என நேரடியாக தன்னுடைய சமூகத்தினரை நம்பி களத்தில் இறங்கினார்.
இறுதியில் தேர்தலில் தோற்று தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். மேலும் ஹரிநாடார் உடன் தொடர்பில் இருப்பதாக நடிகை வனிதா, விஜயலட்சுமி, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஆகியோரிடம் விசாரணை நடக்க உள்ளதாகவும் செய்திகள் வந்தது.
இது ஒருபுறமிருக்க ஹரிநாடார் தான் அணிந்திருந்த நகைகளை யாரிடம் கொடுத்து வைத்துள்ளார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த சந்தேகத்திற்கு விடை கொடுக்கும் விதமாக அவர் இந்த நகைகள் அனைத்தும் நடிகை விஜயலட்சுமியிடம்தான் இருக்கிறது என பத்திரிகை பிரபலம் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கொதித்தெழுந்த விஜயலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் பயில்வான் ரங்கநாதனை ஒருமையில் திட்டி நாறடித்தார். இதற்கு ரங்கநாதன் எப்படி பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.