வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

3 ஆக்சன் ஹீரோக்களை ஒன்று சேர்க்கும் ஹரி.. ஸ்டூடியோ திறந்த கையோடு படத்திற்கு போடப்படும் பிள்ளையார்சுழி

இயக்குனர் ஹரி கோவில், சாமி, தாமிரபரணி, அருள் போன்ற அதிரடி ஆக்சன் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். பெரும்பாலும் அதிரடி காட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர் படங்களில் காமெடிக் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. 2010ல் இவர் இயக்கிய சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அந்த படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுறையாக இந்த படம் அமைந்தது.

அதன் பின்னர் சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் கவனம் செலுத்திய ஹரிக்கு அதெல்லாம் மிகப்பெரிய சருக்கலாகவே அமைந்தது. அதற்கு அடுத்து இவர் இயக்கிய பூஜை, வேங்கை போன்ற படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஹரி தன்னுடைய உறவினரான நடிகர் அருண் விஜய்யை வைத்து யானை படத்தை இயக்கினார். குடும்பப் பின்னணி கொண்ட கதை என்றாலும் இது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Also Read:ஹரி விளையாடி தெறிக்கவிட்ட 5 படங்கள்.. முக்கிட்டு எடுத்த 3வது பார்ட் என்னாச்சு தெரியுமா?

இதற்கிடையில் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த சூர்யாவுடன் இவர் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நேரத்தில், இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ கருத்து வேறுபாடு எனவும், இனி இவர்கள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் ஹரி தன்னுடைய சொந்த ஸ்டூடியோ ஒன்றை திறந்திருந்தார். அந்த திறப்பு விழாவுக்கு நடிகர் சூர்யா பங்கேற்றதால் இவர்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பது உறுதியானது.

ஸ்டூடியோ திறந்த கையோடு ஹரி தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளையும் தொடங்கி இருக்கிறார். ஹரிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த தாமிரபரணி படத்தில் நடித்த நடிகர் விஷாலுடன் இணைய இருக்கிறார். விஷாலுக்கும் அடுத்தடுத்து சறுக்கல்கள் ஏற்படுவதால் தன்னுடைய வெற்றி இயக்குனரான ஹரியுடன் இணைந்து அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Also Read:விஷாலின் குடுமியை பிடித்து ஆட்டிய நீதிமன்றம்.. அதிரடி உத்தரவை போட்ட நீதிபதி

மேலும் ஹரி நடிகர் கார்த்தியை வைத்து படம் பண்ணுவதற்கான பேச்சு வார்த்தையும் முடிவடையும் கட்டத்தில் இருக்கிறதாம். கார்த்தி ஏற்கனவே கொம்பன் மற்றும் விருமன் போன்ற படங்களில் ஆக்சன் ஹீரோவாக கலக்கியிருந்தார். இவர் ஹரி ஸ்டைலில் படம் பண்ணினாலும் ரசிகர்களால் வரவேற்கப்படும். இந்த படத்தின் வேலைகளையும் ஹரி அடுத்து ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

மேலும் நடிகர் சூர்யாவுடன் ஹரி இணைவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதற்கான பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். இந்த மூன்று படங்களையும் வரும் 2024க்குள் முடித்து விட வேண்டும் என்று ரொம்பவும் உறுதியாக இருக்கிறாராம் இயக்குனர் ஹரி. இந்த முறை விட்டதை பிடித்து விட வேண்டும் என்று அடுத்தடுத்து ஆக்சன் ஹீரோக்களுக்கு வலைவீசி இருக்கிறார்.

Also Read:விஷால் நடிப்பில் வெற்றி கண்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.. ஒவ்வொன்றும் முரட்டு கதாபாத்திரம் ஆச்சே.!

Trending News