சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

யானையை வைத்து திமிங்கிலதிற்கு வலைவிரிக்கும் ஹரி.. இணையுமா மாஸ் கூட்டணி

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் குடும்ப சென்டிமெண்ட் கலந்த படமாக வெளியான யானை படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பலமுறை யானை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில் ஒருவழியாக படம் வெளியாகி நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தற்போது அருண் விஜய் கைவசம் பல படங்கள் வைத்திருந்தாலும் யானை படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் இப்படத்தின் ரிலீசுக்கு பிறகு தான் மற்ற படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். ஏனென்றால் யானை படத்தின் வெற்றி அருண் விஜய்யை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லும் என நம்பியிருந்தார்.

அதேபோல் யானை படமும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் யானை படம் இயக்குனர் ஹரிக்கும் தரமான கம்பேக் கொடுத்துள்ளது. டாப் நடிகர்களுக்கு ஹிட் படங்களை கொடுத்து வந்த ஹரிக்கு நடுவில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

தற்போது மச்சான் தயவால் மீண்டும் சினிமாவில் தரமான என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் யானை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஹரி பங்குபெற்ற போது தளபதி விஜயுடன் படத்தில் இணைவது பற்றி பேசியுள்ளார். அதாவது ஹரி விஜய்யை பல முறை சந்தித்து உள்ளதாக கூறி உள்ளார்.

அப்போது பல கதைகளை கூறி உள்ளேன், ஆனால் அந்த கதைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக முடியவில்லை. ஆனால் விஜய்யை வைத்து கண்டிப்பாக படம் இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. வருங்காலத்தில் நிச்சயமாக அது நடக்கும் என நம்புகிறேன் என்று ஹரி தெரிவித்துள்ளார்.

தற்போது யானை படத்தின் வெற்றியால் தளபதி விஜய் என்ற திமிங்கிலதிற்கு ஹரி வலைவிரித்து உள்ளார். ஆனால் விஜய் தற்போது இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார். இதனால் இந்த மாஸ் கூட்டணி இணையுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Trending News