ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

எதிர்நீச்சல் 2-வில் ஆதி குணசேகரனாக நடிக்கப்போவது இவரா?. ஹரிப்ரியா பகிர்ந்த போட்டோ, இவர் நக்கல் மன்னன் ஆச்சே!

Ethirneechal 2: எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக போகும் டிசம்பர் 30 நோக்கி தான் ரசிகர்களின் கவனம் இருக்கிறது.

பல வருடங்களுக்குப் பிறகு சன் டிவி சீரியலை மக்கள் பார்க்க ஆரம்பித்தது எதிர்நீச்சல் முதல் பாகத்தில் தான். பெண்களைத் தாண்டி ஆண்களும் இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள்.

இதற்கு காரணமாக இருந்தது அந்த சீரியலின் முக்கிய கேரக்டர் ஆதி குணசேகரன் தான். அம்மா மீனாட்சி தாயே என மாரிமுத்து சொல்லும் அழகே தனி தான்.

வீட்டில் பெண்களை ஒடுக்குவது, தங்கைக்கு கட்டாய திருமணம் என ஆதி குணசேகரன் செய்யாத அட்ராசிட்டியே கிடையாது.

மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு சீரியல் கொஞ்சம் அடி வாங்கத்தான் ஆரம்பித்தது. அதன் பின்னர் அந்த சீரியலை தாங்கி பிடித்தது என்னவோ நந்தினி மற்றும் ரேணுகாவின் காம்போ தான்.

தற்போது நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி காம்போவில் மீண்டும் எதிர்நீச்சல் 2 உருவாகி இருக்கிறது. மதுமிதாவிற்கு பதிலாக பார்வதி ஜனனி கேரக்டரில் நடிக்கிறார்.

ஆதி குணசேகரனாக நடிக்கப்போவது இவரா?

இவர் ஏற்கனவே ஜீ தமிழ் சீரியலில் நடித்தவர். இந்த நிலையில் ஆதி குணசேகரன் கேரக்டர் இந்த சீசனில் இருக்குமா, அதில் யார் நடிப்பார்கள் என்ற பெரிய சந்தேகம் இருந்தது.

பிரபல நடிகர் பசுபதி தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஹரிப்பிரியா ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதில் எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய கேரக்டர்களான பிரியதர்ஷினி மற்றும் கமலேஷ் ஆகியோர் இருக்கிறார்கள்.

இவர்களுடன் சுப்பு பஞ்சு அருணாச்சலமும் இருக்கிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணனாக நடித்திருக்கிறார்.

Ethirneechal 2
Ethirneechal 2

மேலும் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு சன் டிவி சீரியல் ஒன்றும் புதிதல்ல.

ஏற்கனவே நடிகை ராதிகா நடித்த அரசி மற்றும் செல்வி சீரியல்களில் நடித்தவர் தான். சுப்பு பஞ்சு அருணாச்சலம் சர்க்காஸ்டிக்கான டயலாக்குகளை எளிதாக பேசி நடிக்க கூடியவர்.

எதிர்நீச்சல் குழு உடன் ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார் என்றால் இவர் அதில் ஒரு பங்காக இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இருந்தாலும் ஆதி குணசேகரன் கேரக்டரில் தான் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News