திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரத்னம் படத்தால் ஹரிக்கு அடித்த ஜாக்பாட்.. வலையில் வந்து சிக்கிய திமிங்கிலம்

Director Hari : இயக்குனர் ஹரி கமர்சியல் ஹிட் படங்கள் கொடுத்து வருபவர். சிங்கம் என்ற மாஸ் ஹிட் படம் கொடுத்த பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அதன் பிறகு வரவில்லை.

இதைத்தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து யானை படம் இயக்கி இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து இப்போது விஷாலின் ரத்னம் படம் இயக்கியிருக்கிறார்.

இப்படம் இந்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இப்போது ரத்னம் படத்தை பார்த்த பிரபலங்கள் கண்டிப்பாக இந்த படம் மாஸ் கொடுக்கும் அளவுக்கு வந்திருப்பதாக கூறியுள்ளனர். இல்லையென்றாலும் மினிமம் கேரன்டி ரத்னம் படத்திற்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஹரிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

ஆகையால் விஷாலுக்கு கண்டிப்பாக ரத்னம் படம் கை கொடுக்கும். அதோடு ஹரிக்கும் இப்படத்தின் மூலம் ஆஃபர் கிடைத்திருக்கிறது. ரத்னம் படம் செமையாக வந்துள்ள செய்தி சத்ய ஜோதி மூவிஸ் தயாரிப்பாளர் காதுக்கு சென்றுள்ளது.

இதனால் அவரின் அடுத்த தயாரிப்பில் ஹரியை ஒப்பந்தம் செய்து உள்ளார். அடுத்து ஹரி பெரிய நடிகரின் படத்தை இயக்குவது உறுதியாகி உள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் கேப்டன் மில்லர், வீரன், மாறன் போன்ற படங்களை தயாரித்து உள்ளது.

மேலும் ஹரி சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு படம் பண்ண இப்போதே கதை தயார் செய்து கொண்டிருக்கிறார். எனவே ரத்னம் படம் ரிலீசுக்கு பிறகு ஹரியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது.

Trending News