கடந்த 2016ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ரிது வர்மா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக் தான் நேற்று ஓடிடியில் வெளியான ஓ மணப்பெண்ணே படம். தெலுங்கில் இயக்குனர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் சுமார் 30கோடி ரூபாய் வரை வசூல் செய்து பெஸ்ட் எண்டர்டெயினர் படம் என்ற பெயரை பெற்றது.
தெலுங்கில் சரி ஆனால் தமிழில் படம் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் தான் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. காரணம் ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா மற்றும் ஆதித்ய வர்மா என இரண்டு முறை ரீமேக் செய்து படத்தை கொலை செய்து விட்டதுதான்.
ஆனால் ஓ மணப்பெண்ணே படம் அப்படி அல்ல. ஒரிஜினலை விட ரீமேக் சிறப்பாகவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். காரணம் கதாபாத்திர தேர்வு தான். ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், அஸ்வின் என அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.
சமீபத்தில் கவின் நடிப்பில் ஓடிடியில் வெளியான லிப்ட் படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பீல் செய்ததை போலவே ஓ மணப்பெண்ணே படத்தையும் கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு காமெடி, ரொமான்ஸ், ஆக்டிங் என ஒரு பக்கா பேமிலி எண்டர்டெயினர் படமாக இருக்கும் ஓ மணப்பெண்ணே படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகாமல் தியேட்டரில் வெளியாகி இருந்தால் நிச்சயம் பெரிய அளவில் வசூல் பெற்றிருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
முகவரி மாறியதால் பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க செல்லும் ஹரிஷ் கல்யாண் அவருடன் நண்பராக பழகி பின்னர் இருவரும் பிசினஸ் பார்ட்னராக மாறி இறுதியில் காதலர்களாக இணைவதே ஓ மணப்பெண்ணே படத்தின் கதை. அனைவருமே அவரவர் நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தி உள்ள ஓ மணப்பெண்ணே படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்களையே கொடுத்து வருகிறார்கள்.