வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

வெற்றிமாறனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இளம் நடிகர்… ஒருவேளை அப்படி இருக்குமோ?

சினிமாவைப் பொருத்தவரை ஒரு படம் வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கிய காரணம் அப்படத்தின் கதையும், அதை கையாளும் இயக்குனரும் மட்டுமே. அந்த விதத்தில் தனது படங்களை மிகவும் திறமையாக கையாளுவதில் கை தேர்ந்தவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவரது படங்கள் அனைத்துமே வெற்றி பெறுவதோடு பல விருதுகளையும் குவித்து வருகிறது.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படம் மூலமாக சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன். முதல் படமே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதுமட்டுமின்றி வெற்றிமாறன் தனுஷ் உடன் கூட்டணி அமைத்த அனைத்து படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

பொல்லாதவன் படத்தை அடுத்து இரண்டாவது முறையாக தனுஷுடன் ஆடுகளம் படத்தில் வெற்றிமாறன் கூட்டணி அமைத்தார். சேவல் சண்டையை மையப்படுத்தி உருவாகி இருந்த இப்படம் தேசிய விருதை தட்டிச்சென்றது. இதன்மூலம் தனுஷ் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்தார். அதேபோல் வெற்றிமாறனுக்கு இப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது.

இதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை, அசுரன், வடசென்னை உள்ளிட்ட அனைத்து படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றன. தற்போது காமெடி நடிகர் சூரியை முதன்மை கதாபாத்திரமாக வைத்து வெற்றிமாறன் விடுதலை எனும் படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து சூர்யாவை நாயகனாக வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் நேற்று அவரது பிறந்த நாளை கொண்டாடினார். வெற்றிமாறனுக்கு நடிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், வளர்ந்து வரும் இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

harish-kalyan-cinemapettai
harish-kalyan-cinemapettai

திரையுலகைப் பொறுத்தவரை எந்த ஒரு காரணமும் இல்லாமல் இதுபோன்ற சந்திப்புகள் நடைபெறுவது இல்லை. எனவே வெற்றிமாறன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் ஏதேனும் புதிய படத்தில் நடிக்க உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் ஹரிஷ் கல்யாண் இயக்கத்தில் வெளியான பொறியாளன் என்ற படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்கள் புதிய படத்தில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News