வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சத்தமில்லாமல் காய் நகர்த்திய ஹரிஷ் கல்யாண்.. கடுப்பில் முன்னாள் காதலிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இந்நிகழ்ச்சி மூலம் ஹரிஷ் கல்யாண் மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்தார். மேலும் அதன் பிறகு நிறைய பட வாய்ப்புகளும் ஹரிஷ் கல்யாணத்துக்கு வந்தது.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது அவருடன் சக போட்டியாளராக இருந்த ரைசாவுடன் காதல் வயப்பட்டார் என்று அப்போது கிசுகிசுக்கள் வெளியானது. மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ஓரிரு படங்களிலும் நடித்திருந்தனர்.

அதன்பிறகு பிரியா பவானி சங்கர் உடன் ஓமணப் பெண்ணே படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் அடிக்கடி வெளியில் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

பிரியா ஏற்கனவே ஒருவரை பல வருடமாக காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவருடன் பிரேக்கப் ஆகிவிட்டது, ஹரிஷ் கல்யாணனை தான் பிரியா பவானி சங்கர் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என தகவல் வெளியானது. ஆனால் மீண்டும் பிரியா பவானி சங்கர் தன் காதலருடன் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாணத்துக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பிரபல கோலிவுட் ஜோடிகளான நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. மேலும் ஆதி, நிக்கி கல்ராணி திருமணமும் இந்த ஆண்டு நடைபெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஹரிஷ் கல்யாணின் திருமணமும் நடக்க உள்ளதாம். மேலும், ஹரிஷ் கல்யாண் தனது பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள உள்ளாராம். ரைசா, ப்ரியா பவானி சங்கர் இவர்களில் ஒருவரை தான் ஹரிஷ் கல்யாண் திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது வீட்டில் பார்த்த பெண்ணை மணமுடிக்க உள்ளார் ஹரிஷ் கல்யாண்.

Trending News