முழுவதுமாய் முடிக்கப்பட்டு வியாபாரமாகாமல் தமிழில் 30, 40 படங்களுக்கு மேல் கிடப்பில் கிடக்கிறதாம். பாதியில் நிறுத்தப்பட்டு, பணம் இல்லாமல் சூட்டிங் நிறுத்தம் போன்ற காரணங்களை கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் முழுவதுமாக படத்தை முடித்த போதிலும் அந்த படங்கள் வெளிவரவில்லை என்றால் அது தயாரிப்பாளருக்கு நஷ்ட கணக்கில் தான் சேரும். அப்படி வெளிவராமல் கஷ்டப்படும் 6 படங்கள்.
துருவ நட்சத்திரம்: கௌதம் வாசுதேவ் மேனன், விக்ரமை வைத்து இயக்கிய படம் இது. சமீபத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு பல நடவடிக்கைகள் எடுத்தனர். ஆனால் மீண்டும் கை கழுவி விட்டனர். பண பற்றாக்குறை மற்றும் படத்தின் மீது உள்ள கடன்கள் எல்லாம் சேர்ந்து இதை கிடப்பில் கிடத்தி விட்டது.
பார்ட்டி: வெங்கட் பிரபு இந்த படத்தை 2018 ஆம் ஆண்டே எடுக்க ஆரம்பித்து விட்டார். ஜெய், சிவா, சத்யராஜ் ஜெயராம், ஷாம், நாசர் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடித்துள்ளனர். ஆனால் இந்த படம் இன்று வரை வியாபாரம் ஆகவில்லை. அதனால் மேற்கொண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு யாரும் வரவில்லை.
மோகன்தாஸ்: விஷ்ணு விஷால் சுமார் 15 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்கினார். ஆனால் தயாரிப்பாளர் உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இதை அப்படியே கைவிட்டு விட்டார். ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் போன்றவர்கள் இந்த படத்தில் நடித்தனர்.
நூறு கோடி வானவில்: நன்றாக பெயர் அமைந்த போதிலும் இந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. ஹரிஷ் கல்யாண், வெந்து தணிந்தது காடு ஹீரோயின் சித்தி இத்தானி போன்றவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்பொழுது இந்த படத்தை ரிலீஸ் செய்ய முயற்சித்த போதிலும் அதற்குண்டான வழி கிடைக்கவில்லை.
வா டீல்: மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் ஜெயித்து வந்தவர் அருண் விஜய். ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்தி விடலாமா என்று கூட யோசித்தாராம் ஆனால் என்னை அறிந்தால் படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் சினிமாவில் அடுத்த இன்னிங்ஸை தொடங்கினார். இவரின் நடிப்பில் உருவாகிய வா டீல் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.