புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Harish Kalyan: நல்ல வாய்ப்பை கைநழுவ விட்டுட்டு கதறி அழும் ஹரிஷ் கல்யாண்.. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கவின்

Harish Kalyan: சினிமாவில் எத்தனையோ ஆர்டிஸ்ட்கள் திறமையை வெளிக்காட்டி தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்கு போராடி வருகிறார்கள். அப்படித்தான் ஹேண்ட்ஸம் ஹீரோ ஹரிஷ் கல்யாண், சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் அதிக சர்ச்சைகள் ஏற்பட்டாலும் போகப்போக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

ஆனாலும் மக்களிடம் இருந்து பெருசாக வரவேற்பு கிடைக்காததால் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களை கவர்ந்து விட்டார். அதன் பிறகு நடித்த படங்கள் அனைத்தும் மக்களை ஈர்க்க ஆரம்பித்து விட்டது. கடைசியாக நடித்த பார்க்கிங் படம் இவருடைய நடிப்பு சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு கைதட்டளை வாங்கி விட்டது.

தற்போது 100 கோடி வானவில், டீசல், ரப்பர் பந்து போன்ற படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார். இதற்கிடையில் இவரை தேடி வந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டார். ஆனால் தற்போது அந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து புலம்பிக்கொண்டு கதறி அழுது வருகிறார்.

கையில் கிடைத்ததை விட்டுட்டு பரிதிவிக்கும் ஹரிஷ்

அதாவது கவின் நடிப்பில் மே 10ம் தேதி வரவேற்கும் படம் தான் ஸ்டார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வந்து எல்லாத்தையும் கவர்ந்து விட்டது. அத்துடன் படமும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செமையாக வந்திருக்கிறது. இப்படி இப்படத்தை பற்றி ஆகா ஓஹோ என்று பலரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

இதனை பார்த்து தான் ஹரிஷ் கல்யாண் ரொம்பவே கடுப்பில் இருக்கிறாராம். ஏனென்றால் இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஹரிஷ் கல்யாண் தான். ஆனால் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தை பெருசாக எடுத்துக் கொள்ளாமல் ரிஜெக்ட் பண்ணி விட்டார். ஆனால் அதில் கவின் நடித்து பேரும் புகழையும் வாங்கி வருவதால் ஹரிஷ் கல்யாண் பொறாமையில் கொந்தளிக்கிறார்.

போதாதற்கு இப்படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல ரிவ்யூ கிடைத்திருக்கிறது. அந்த வகையில் எப்படியும் ஹிட் ஆகிவிடும். இதனால் வந்த நல்ல வாய்ப்பை கை நழுவ விட்டு விட்டோமே என்று ரொம்பவே வருத்தப்படுகிறார். இதனை தொடர்ந்து இனி ஹரிஷ் கல்யாணக்கு பதிலாக கவின் நடிக்கட்டும் என்று பலரும் அவரைத் தேடிப் போவதால் இன்னுமே வேதனையில் தவித்து வருகிறார்.

Trending News