வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பெயரையும் வெற்றியையும் காப்பாற்றும் ஹரிஷ் கல்யாண்.. தொடர்ந்து லப்பர் பந்து அன்பு பக்கம் அடிக்கும் ஜாக்பாட்

14வருட போராட்டத்திற்கு பின்பு ஹரிஷ் கல்யாண் இப்போதுதான் சினிமாவில் பெயர் எடுக்கத் தொடங்கி இருக்கிறார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதுதான். 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண்.

இவர் தன்னுடைய கேரியரில் இதுவரை 23 படங்கள் நடித்துள்ளார் ஆனால் அதில் ஏழு படங்களுக்கு மேல் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் தான்பண்ணியிருந்தார். பல படங்கள் கை கொடுக்காவிட்டாலும் தொடர்ந்து சோர்ந்து விடாமல் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார்.

வில் அம்பு, கசடதபற, தாராள பிரபு, பியார் பிரேமா காதல் என நிறைய படங்களில் தலைகாட்டினாலும் எந்த படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை. 2023 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த பார்க்கிங் படம் மூலம் சினிமாவில் இவர் ஒரு இடத்துக்குச் சென்றார்.

அந்த படத்திற்கு பின்னர் தற்போது இவர் நடித்த லப்பர் பந்து திரைப்படம் அதிரி புதிரி ஹிட்டானது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் உடன் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதன் மூலம் இவருக்கு இப்பொழுது அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

ஆனால் அனைத்தும் இரட்டை ஹீரோ சப்ஜெக்டாக வருகிறதாம். இருந்தாலும் இதில் என்ன இருக்கிறது என தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்.தற்போது பிலிம் பெஸ்டிவல் சென்னையில் நடக்க இருக்கிறது அதில் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படமும், லப்பர் பந்து படமும் ஒளிபரப்பப்படுகிறது..

Trending News