வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மணமேடையில் மனைவிக்கு முத்தமிட்ட ஹரிஷ் கல்யாண்.. இணையத்தை அலங்கரிக்கும் திருமண புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் பெண் ரசிகர்கள் மத்தியில் ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தார். மேலும் ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து ஒரே ஹீரோயின்களுடன் நடித்து வந்ததால் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் அண்மையில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த விஷயத்தை வெளிப்படுத்தியிருந்தார். தனது குடும்பத்தால் பார்த்த பெண் நர்மதா உதயகுமாரை விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ஹரிஷ் கல்யாண் அறிவித்தார். அதேபோல் இன்று கோலாகலமாக ஹரிஷ் கல்யாண் திருமணம் நடந்துள்ளது.

Also Read : சத்தமில்லாமல் காய் நகர்த்திய ஹரிஷ் கல்யாண்.. கடுப்பில் முன்னாள் காதலிகள்

சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமணம் மண்டபம் ஒன்றில் பிரம்மாண்டமாக ஹரிஷ் கல்யாண் திருமணம் நடந்துள்ளது. இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார் ஆகியோரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தையே அலங்கரித்துள்ளது.

இதை பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி வந்த ஹரிஷ் கல்யாண் தற்போது காதும் காதும் வைத்தபடி தனது திருமணத்தை மிக விரைவில் முடித்துள்ளார்.

Also Read : நெஞ்சுக்கு நீதி பிரபலத்துடன் இணையும் ஹரிஷ் கல்யாண்.. எதிர்பாராத கூட்டணி

இப்போது ஹரிஷ் கைவசம் நூறு கோடி வானவில் மற்றும் டீசல் படங்கள் உள்ளது. இவ்வாறு தனது சினிமா கேரியரிலும் வளர்ந்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது நர்மதாவை கரம்பிடித்து தனது சொந்த வாழ்க்கையிலும் அடுத்தடுத்த உயரத்தை அடைய உள்ளார்.

நர்மதாவை கரம்பிடித்த ஹரிஷ் கல்யாண்

harish-kalyan-marriage

கோலாகலமாக நடந்த ஹரிஷ் கல்யாண் திருமணம்

harish-kalyan-marriage-photos

மனைவியை முத்தமிடும் ஹரிஷ் கல்யாண்

harish-kalyan-marriage-photos

Also Read : படம் எப்படியாவது ஓடணும், பிக்பாஸிடம் தஞ்சமடைந்த ஹரிஷ் கல்யாண்.. பழைய பாக்கி எதுவும் இருக்கும் போல

Trending News