ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நெஞ்சுக்கு நீதி பிரபலத்துடன் இணையும் ஹரிஷ் கல்யாண்.. எதிர்பாராத கூட்டணி

கடந்த 2010 ஆம் ஆண்டு சாமி இயக்கத்தில் வெளியான சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் மூலம் நடித்து சினிமாவில் நுழைந்த ஹரிஷ் கல்யாண் அதைத் தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம் என பல படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். மேலும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கினார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கசட தபற’ திரைப்படத்தை தொடர்ந்து ஸ்டார், நூறு கோடி வானவில் போன்ற படங்களையும் தற்போது புதிதாக மற்றொரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

இவர் கமிட்டாகியிருக்கும் புதிய படத்தை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கப்போகும் தகவல் தற்போது ரசிகர்களிடம் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் தமிழரசு பச்சைமுத்து தான் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தின் ரைட்டர்.

இவர்தான் நெஞ்சுக்கு நீதி படத்தின் மிரட்டலான வசனத்தை எழுதி திரையரங்கையே அதிர விட்டவர். அதுமட்டுமின்றி சீனாவிலும் தமிழ் சினிமாவை வெளியிடும் வகையில் கோலிவுட்டின் பெருமையை நிலைநாட்டிய சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான கனா திரைப்படத்தின் இணை இயக்குனராகவும் தமிழரசன் பச்சமுத்து பணியாற்றினார்.

நெஞ்சுக்கு நீதி, கானா திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஹரீஸ் கல்யாண் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை முதல் முதலாக இயக்கவிருக்கும் தமிழரசன் பச்சமுத்துவின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

இயல்பான நடிப்பை வெளிக்காட்டும் ஹரிஷ் கல்யாணை வைத்து நிச்சயம் தமிழரசன் பச்சமுத்து வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படத்தையே உருவாக்குவார் என கோலிவுட்டில் இந்த படத்தை குறித்து பரபரப்பாக பேசி கொண்டிருக்கின்றனர்.

Trending News