புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இரு மகள்களுக்கும் வைத்த கெடு.. உண்மையை கக்கிய கண்ணம்மா

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் மூன்று நாட்களாக சென்ரல் மினிஸ்டர் உட்பட 50 பேர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி உள்ளனர். இதற்கிடையில் தீவிரவாதிகளின் தலைவர் அரசாங்கத்திற்கு விடுத்த கோரிக்கையை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்று கேட்டபோது 20 தீவிரவாதிகளை விடுவிப்பது, 500 கோடி பணம் உள்ளிட்ட அளவுக்கு அதிகமான டிமான்ட் வைத்ததாக அதை நிராகரித்து விட்டதாக சொல்கின்றனர்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த தீவிரவாதிகளின் தலைவர், ஹேமா மற்றும் கண்ணம்மா இருவரையும் துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகின்றனர். மதியம் 12 மணிக்குள் அவர்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால், இந்த இரண்டு குழந்தைகளும் பிணமாகி விடுவார்கள் என்றும் மிரட்டுகின்றனர்.

Also Read: பிக்பாஸ் வருவதற்கு 5 கண்டிஷன் போட்ட அமலாபால்.. வரவே வேண்டாம் என கூறிய விஜய் டிவி

இதைக் கேட்டதும் சௌந்தர்யா உள்ளிட்ட பாரதிகண்ணம்மா குடும்பமே உடைந்து போய் உள்ளனர். இதன்பிறகு பாசமாக இருக்கும் இரட்டைக் குழந்தைகளான லஷ்மி, ஹேமா இருவரும் தன்னுடைய வயிற்றில் 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த பிள்ளைகள் தான்.

அவர்கள் கருவரை முதல் இப்போது வரை மனதளவில் ஒன்றாகவே இருக்கின்றனர் என அஞ்சலியிடம் கண்ணம்மா சொல்கிறார். இதைக்கேட்டதும் லஷ்மி, ஹேமாவின் அம்மா நீதானாம்மா என்று கண்ணம்மாவிடம் உண்மையை கேட்டு வாங்குகிறார்.

Also Read: ஜி பி முத்து தொடர்ந்து பிக்பாஸில் வர இருக்கும் யூடியூப் பிரபலம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் உலகநாயகன்

உடனே கண்ணம்மாவும் ஹேமா-லஷ்மி இருவரும் ஒன்றாக பிறந்த இரட்டையர்கள் என்று உண்மையை உடைக்கிறார். இதன்பிறகு இன்று மதியத்திற்குள் அரசாங்கம் என்ன முடிவெடுத்து லஷ்மி ஹேமா இருவரின் உயிரை காப்பாற்ற போகின்றனர் என்ற பரபரப்பான சம்பவம் பாரதிகண்ணம்மா சீரியலில் நிகழ்ந்துள்ளது.

இருப்பினும் கதையை மறந்து விட்டு தீவிரவாதிகளை வைத்தே இந்த இரண்டு வாரங்களாக உருட்டும் பாரதிகண்ணம்மா சீரியலை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கிழித்து தொங்க விடுகின்றனர்.

Also Read: சந்தியா அங்க இருந்தா சீனே வேற.. தப்பிக்க திண்டாடும் பாரதி கண்ணம்மா

Trending News