வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

ரவி மோகன் படத்திலிருந்து விலகிய ஹாரிஸ் ஜெயராஜ்.. என்னவா இருக்கும்?

Ravi Mohan: இந்த செய்தியின் தலைப்பை பார்த்ததும் யாருப்பா அந்த ரவி மோகன் என்று எல்லோருக்குமே தோன்றும். ஜெயம் ரவியை இனி ரவி மோகன் என்ற சொல்லிப் பழக இன்னும் கொஞ்ச நாட்கள் எடுக்கத்தான் செய்யும்.

எது எப்படியோ பெயரை மாற்றியதும் ரிலீசான முதல் படமே நல்லது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்த காதலிக்க நேரமில்லை படம் டீசன்ட் ஹிட் கொடுத்திருக்கிறது.

இதை தொடர்ந்து ரவிக்கு அடுத்து ஜீனி என்ற படமும் மார்ச் மாதம் ரிலீஸ் இருக்கு காத்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து ரவி அடுத்து சுதா கோங்கர இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

விலகிய ஹாரிஸ் ஜெயராஜ்

இதற்குப் பிறகு டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்துக்கு தான் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக இருந்தது.

சமீபத்தில் மக்கா மிஷி பாடல் மூலம் ஜெயம் ரவியை மீண்டும் ஃபார்முக்கு கொண்டு வந்த பெருமை ஹாரிஸ் ஜெயராஜுக்கு சேரும்.

அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவி நடித்த சூப்பர் ஹிட் அடித்த எங்கேயும் காதல் படத்திலிருந்து அழகான பாடல்களை கொடுத்திருப்பார்.

இந்த நிலையில் இவர் ஜெயம் ரவியின் அடுத்த ப்ராஜெக்ட்லிருந்து விலகி இருக்கிறார்.

இதற்கான காரணம் என்ன என்று சரியாக தெரியவில்லை. இவருக்கு பதிலாக புஷ்பா படத்தின் இசையமைப்பாளர் சாம் சி எஸ் அந்த படத்திற்கு இசையமைக்கிறார்

Trending News