சீரியல் நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்ட்.. என்ன காரணம் தெரியுமா.?

Raveena Daha : வைகைப்புயல் வடிவேலுக்கு சில காலம் ரெட் கார்ட் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது தான் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தான் சின்னத்திரை நடிகைக்கு சமீபத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரவீனா தாஹா நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 தொடரில் நடித்து மிகவும் ரசிகர்களிடம் பிரபலமானார். ‌

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதையும் பயன்படுத்திக் கொண்டார். இதைத்தொடர்ந்து அதே விஜய் டிவியில் சிந்து பைரவி என்ற சீரியலில் கமிட் ஆகி இருந்தார்.

 ரவீனா தாஹா-க்கு ரெக் கார்ட் கொடுக்கப்பட்டதா 

இந்தத் தொடரின் ப்ரோமோ வெளியான நிலையில் சீரியலில் இருந்து ரவீனா விலகியதாக கூறப்பட்டது. மேலும் அதற்கான காரணம் என்னவென்றால் இந்த சீரியலில் இரண்டு கதாநாயகிகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. 

ஆனால் ஒப்பந்தத்தின் போது தான் மட்டும் தான் முதன்மை கதாபாத்திரம் போல இருந்ததாக ரவீனா சொன்னதாக தெரிகிறது. இதை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் சிந்து பைரவி தொடரின் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். 

இதன் காரணமாகத்தான் ரவீனாவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் தான் சிறிது காலம் சின்னத்திரை மற்றும் வேறு நிகழ்ச்சிகளில் தலை காட்டாமல் இருந்தார். 

ஆனால் இப்போது இது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் ரவீனா. எனக்கு ரெட் கார்ட் எல்லாம் கொடுக்கவில்லை. சிந்து பைரவி தொடரில் நடிக்காத அதற்கான காரணம் என்னுடைய பர்சனல்.

மேலும் விரைவில் நான் நடன நிகழ்ச்சி மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடிப்பேன் என்று ரவீனா கூறி இருக்கிறார். பர்சனல் காரணமாக இருந்தால் என்னவாக இருக்கும் என்று இப்போது ரசிகர்கள் மீண்டும் பிரச்சனையை கிளப்பி வருகிறார்கள்.

Leave a Comment