வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

ஹாட்ரிக் விக்கெட் எடுத்த சுந்தர் சி.. இது சுத்தமா செட் ஆகல அதுக்கு போயிடுங்க.!

சினிமாவை பொருத்தவரை வெற்றி தோல்வி என்பது சாதாரணமான ஒன்று தான். ஒரு இயக்குனர் தொடர்ந்து 4 படம் வெற்றி கொடுத்தால் நிச்சயம் அடுத்து ஒரு படம் தோல்வி படமாக அமையும். யாராலும் தோல்வி இல்லாமல் தொடர் வெற்றி படங்களை வழங்க முடியாது இதுதான் நிதர்சனமான உண்மை.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் வலம் வருபவர் தான் சுந்தர் சி. பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுந்தர் சி முறை மாமன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு என நகைச்சுவை கலந்த குடும்ப படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதுவரை சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே நல்ல வெற்றி பெற்றன.

தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கி வந்த சுந்தர் சி தலைநகரம் படம் மூலமாக கதாநாயகனாக களத்தில் இறங்கினார். இருப்பினும் படங்களையும் இயக்கி வந்தார். அந்த வரிசையில் இவர் இயக்கத்தில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் அனைத்துமே தோல்வியை தழுவி வருகின்றன.

இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மூன்று படங்கள் தொடர் தோல்வியை சந்தித்துள்ளன. அந்த வகையில் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன், விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன், தற்போது ஆர்யா மற்றும் சுந்தர் சி நடிப்பில் வெளியாகியுள்ள அரண்மனை 3 ஆகிய மூன்று படங்களுமே தோல்வியை தழுவி ஹாட்ரிக் அடித்துள்ளது.

sundar-c-aranmanai3
sundar-c-aranmanai3

தொடர்ந்து பல வெற்றி படங்களை வழங்கிய சுந்தர் சி க்கு என்னதான் ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அவரையும் குறை கூற முடியாது. ஒரு சமயத்தில் அவர் படங்களை ரசித்த ரசிகர்கள் தான் இப்போது அவர் படங்களை குறை சொல்கிறார்கள். காலம் மாற மாற ரசிகர்களின் எண்ணங்களும் மாறுகின்றன.

அந்த எண்ணங்களை புரிந்து கொள்வதில் ஏற்படும் தடுமாற்றம் காரணமாகவே பெரும்பாலான இயக்குனர்கள் தோல்வியை சந்திக்கிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்கள் மாறியதால் தற்போது சுந்தர் சி இயக்கும் படங்கள் வெற்றி பெறுவதில்லை. இதனால் இயக்கத்தை விட்டு விட்டு நடிப்புக்கு சென்றுவிடலாம் என்று ரசிகர்கள் அட்வைஸ் கூறிவருகின்றனர்.

Trending News