திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பத்து தல சிம்புவுக்கு ஹாட்ரிக் வெற்றியா.. இது பத்து தலயா இல்ல பாதி தலையா.? முழு விமர்சனம்

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பத்து தல திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்யப்பட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்த இந்த திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்தது என்பதை ஒரு விமர்சனத்தின் வாயிலாக இங்கு காண்போம்.

கதைப்படி முதல்வராக இருக்கும் சந்தோஷ் பிரதாப் திடீரென காணாமல் போகிறார். இதனால் தமிழக அரசியல் களமே கிடுகிடுத்துப் போகிறது. அப்போது தாதா ஏஜிஆரின் விசுவாசி தற்காலிக முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார். அப்போது முதல்வரை கடத்தியது பற்றிய விசாரணையில் சிபிஐ இறங்குகிறது. அதில் அண்டர் கிரவுண்ட் ஆபீசராக இருக்கும் கௌதம் கார்த்திக் ஒரு அடியாளாக ஏ ஜி ஆர்-ஐ நெருங்குகிறார்.

Also Read: ஏஜிஆர்-ஆக மிரட்டும் சிம்பு.. அனல் பறக்கும் பத்து தல ட்விட்டர் விமர்சனம்

இதில் முதல்வர் என்ன ஆனார், ஏஜிஆர் ஆக வரும் சிம்புவின் பின்னணி என்ன, கௌதம் கார்த்திக்கின் நோக்கம் நிறைவேறியதா என்பது போன்ற பல முடிச்சுகளை அவிழ்ப்பது தான் இப்படத்தின் கதை. முதலில் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருந்த சிம்பு அதன் பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றதுமே படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

அந்த எதிர்பார்ப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அவர் தன் நடிப்பால் மிரள விட்டிருக்கிறார். ஆனால் இடைவேளைக்கு முன்பாக அவர் அறிமுகப்படுத்தப்படும் காட்சி விக்ரம் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. மேலும் அந்த படத்தின் தாக்கத்தினால் தான் இயக்குனர் இந்த காட்சியை வலுக்கட்டாயமாக சேர்த்திருக்கிறாரோ என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது.

Also Read: பத்து தல படத்திற்கு கேவலமா ப்ரமோஷன் செய்யும் கூல் சுரேஷ்.. சிம்பு பெயரை கெடுக்க இவரே போதும்

இருப்பினும் பத்து தல ராவணனாக சிம்பு அதகளம் செய்திருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக கௌதம் கார்த்திக் படத்திற்கான பக்க பலமாக இருக்கிறார். அவருடைய முன்னாள் காதலியாக வரும் தாசில்தார் பிரியா பவானி சங்கர் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அடுத்தபடியாக துணை முதல்வராகவும், சந்தோஷ் பிரதாப்பின் அண்ணனாகவும் வரும் கௌதம் மேனன் பயங்கர வில்லத்தனம் செய்திருக்கிறார்.

ஆனால் அந்த வேலையையும் சிம்பு கையில் எடுத்து விட்டதால் இவருடைய வில்லத்தனமும் பெரிய அளவில் மனதில் ஒட்டவில்லை. அதைத்தொடர்ந்து ஏ ஆர் ரகுமானின் இசையும் சிறு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இரண்டு பாடல்களைத் தவிர மற்றவை மனதில் நிற்கவில்லை. அதிலும் சாயிஷாவின் குத்தாட்டம் படத்திற்கு தேவையில்லாத ஒரு ஆணியாகவே இருக்கிறது.

Also Read: பத்து தலையில் பிரியா பவானி ஷங்கர் சம்பளம்.. ஒரு பாட்டு ஆடி பாதி சம்பளம் வாங்கிய சாயிஷா

இதற்காகவா ஹீரோயினை விட அதிக சம்பளம் கொடுத்து அவரை ஆட விட்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அதேபோன்று படத்தின் மேக்கிங் கூட திருப்திகரமாக இல்லை. இப்படி படத்திற்கு நிறைய விஷயங்கள் பின்னடைவாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் மாநாடு, வெந்து தணிந்தது காடு வெற்றிக்கு பிறகு வெளியாகி உள்ள இப்படம் சிம்புவுக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைவது கொஞ்சம் சந்தேகம் தான். ஆக மொத்தம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த பத்து தல – பாதி தலையாக இருக்கிறது என்பது தான் உண்மை.

Trending News