புதன்கிழமை, ஜனவரி 22, 2025

காந்தாரா ஹீரோக்கு போன் போட்ட ரஜினி.. வாய்ப்பை வைத்து பக்காவாக ஸ்கெட்ச் போட்ட இயக்குனர்

சினிமாவை பொறுத்தவரையில் டாப் ஹீரோக்களின் படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு நேர் எதிராக குறைந்த பட்ஜெட்டில் நிறைய நல்ல படங்கள் வருகிறது. அந்த படங்கள் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது.

அவ்வாறு யாரும் எதிர்பார்க்காத விதமாக கன்னட மொழியில் வெளியான காந்தாரா படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இது கன்னட மொழியில் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மொழி ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் 16 கோடி பட்ஜெட்டில் தான் உருவானது.

Also Read : மீண்டும் பொன்னியின் செல்வனை சீண்டி பார்க்கும் காந்தாரா.. எதிர்பார்ப்பை கிளப்பிய அடுத்த கட்ட மோதல்

காந்தாரா படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படகுழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்திய சினிமாவின் தலைசிறந்த படமாக காந்தாரா படம் அமைந்துள்ளதாக ரஜினி புகழாரம் கொடுத்திருந்தார்.

மேலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் காந்தாரா பட நடிகர் ரிஷப் அவர்களுக்கு போன் செய்து படத்திற்கு வாழ்த்துக்கள் கூறி ரஜினியிடம் கொடுத்துள்ளார். ரிஷப் மற்றும் ரஜினி நீண்ட நேரம் கன்னடத்திலேயே பேசி இருந்துள்ளனர். ரஜினி சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு ரிஷபை அழைத்துள்ளார்.

Also Read : சின்ன கல்லு பெத்த லாபம், கம்மி பட்ஜெட்டில் பல கோடி லாபம் பார்த்த காந்தாரா.. 6 மடங்கு அள்ளிய தயாரிப்பாளர்

இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ரஜினிக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளார் ரிஷப். அதாவது தலைவருக்கு கந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஒரு கதையை சொல்லி இருக்கிறாராம். சூப்பர் ஸ்டார் இருக்கும் கதை ரொம்ப பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தலைவர் இன்னும் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்க வில்லையாம். இதற்காக தற்போது ரிஷப் காத்துக் கொண்டிருக்கிறார். இதனால் காந்தாரா போன்ற ஒரு படம் தமிழ் சினிமாவில் உருவாக அதிக வாய்ப்புள்ளது. மேலும் தற்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காந்தாரா படம் நவம்பர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Also Read : ஒவ்வொரு சீனையும் புல்லரிக்க வச்சிட்டீங்க.. ரஜினி வெளியிட்ட டிவிட்டர் பதிவால் அதிரும் இணையதளம்

Trending News