திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஓடிடியில் வெளியாகி உள்ள 5 படங்கள்.. சக்கை போடு போடும் கழுவேத்தி மூர்க்கன்

5 Tamil Films Streaming Now In OTT : திரையரங்குகளில் வெளியான படங்கள் நன்கு ஓடிய பிறகு ஓடிடியில் சமீபகாலமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்போது ஐந்து படங்கள் ஒடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தப் படங்கள் மற்றும் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

தீரா காதல் : ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் மே 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தீரா காதல். இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் வரவேற்பு கிடைக்காத நிலையில் இப்போது ஒடிடியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read : கூடா நட்பு கேடாய் போய் முடியும்.. ஜெய்யின் சினிமா வாழ்க்கை சோலி முடிய இந்த 2 நடிகைகள் தான் காரணம்

கொன்றால் பாவம் : தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் மார்ச் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் கொன்றால் பாவம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

கருங்காப்பியம் : டிகே இயக்கத்தில் காஜல் அகர்வால், ரைசா வில்சன், ரெஜினா காசண்ட்ரா, ஜனனி ஐயர் போன்ற பல நடிகைகள் ஒன்றாக சேர்ந்து நடித்த படம் கருங்காப்பியம். இப்படம் திரையரங்குகளில் மே 19 வெளியான நிலையில் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் இப்போது வெளியாகி இருக்கிறது.

Also Read : காற்று வாங்கிய தியேட்டர்.. தொடர் பிளாப்பால் விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

காசேதான் கடவுளடா : கண்ணன் இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு மற்றும் விஜய் டிவி புகழ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காசேதான் கடவுளடா. மே 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆகையால் இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

கழுவேத்தி மூர்க்கன் : கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெறுகிறது.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷை ஓரம் கட்டிய அருள்நிதி.. 3வது நாள் வசூலில் பெருத்த அடி வாங்கிய தீராக் காதல், மூர்க்கன்

Trending News