செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பெரிய தியாகி இவன்.. உனக்கு பிறந்த குழந்தைக்கு அப்பனா இருக்க துப்பு இல்ல பாரதி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடர் கிளைமாக்ஸை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்ள கோவிலுக்கு வந்துள்ளார்.

வெண்பா கழுத்தில் தாலி கட்ட போகும் கடைசி நிமிடத்தில் கண்ணமா அங்கு வந்த திருமணத்தை நிறுத்துகிறார். பாரதியின் அம்மா சௌந்தர்யா இப்போது ஏன் வெண்பாவை நீ திருமணம் செய்கிறாய் என காரணத்தைக் கேட்கிறார்.

Also Read :சமந்தா போல் நோயால் பாதிக்கப்பட்ட விஜய் டிவி பிரபலம்.. ஆறுதல் சொல்லி ஆச்சரியப்பட வைத்த சம்பவம்

அதற்கு பாரதி, வெண்பா இப்போ கர்ப்பமாக இருக்கா, அவளோட குழந்தைக்கு ஒரு சமூக அந்தஸ்து வேணும்னு என்கிட்ட கேட்டா அதான் அவளை கல்யாணம் பண்ணிக்க சமாதித்தேன் என்று கூறுகிறார். உடனே ஆத்திரம் அடைந்த கண்ணம்மா பாரதியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.

உனக்கு பொறந்த குழந்தைக்கு நீ அப்பனா இருக்க துப்பு இல்ல, இதுல எவனுடைய குழந்தைக்கு நீ அப்பனா இருக்க போறியா, பெரிய தியாகி நீ என வெளுத்து வாங்குகிறார் கண்ணம்மா. அப்போது வெண்பா வயிற்றில் வளரும் குழந்தைக்கு காரணம் நான் தான் என ரோகித் கூறுகிறார்.

Also Read :கோபின்னு ஒரு ஆளே இல்ல, அட்ரஸ் இல்லாமல் அவமானப்படும் அங்கிள்.. அசிங்கப்படுத்தும் பாக்யா, வெறுப்பில் ராதிகா

இதைக் கேட்ட பாரதி அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்பு தனது குழந்தைகளான லக்ஷ்மி மற்றும் ஹேமா இருவரையும் கண்ணம்மா அழைத்துக் கொண்டு கோவிலில் இருந்து வெளியேறுகிறார். மேலும் பாரதியின் மொத்த குடும்பமும் அவரை நிற்கதியாக விட்டுவிட்டு கோவிலில் இருந்து செல்கின்றனர்.

இதனால் பாரதி தப்பை உணர்ந்து கண்ணம்மாவின் காலில் விழவும் தயாராக உள்ளார். மேலும் அதே கோயிலில் ரோகித் வெண்பாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார். வேறு வழியில்லாமல் வெண்பாவும் ரோகித்துடன் சேர்ந்து வாழ உள்ளார். இவ்வாறு பாரதி கண்ணம்மா தொடர் முடிவுக்கு வர இருக்கிறது.

Also Read :இந்த வாரம் நாமினேட்டான 5 போட்டியாளர்கள்.. அசலைத் தொடர்ந்து வெளியேற போகும் சிடுமூஞ்சி

Trending News