ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அவர் ஒரு ரோட் சைடூ பௌலர்.. இந்திய வீரரை தரக்குறைவாக பேசிய பாகிஸ்தான் ஊழல் மன்னன்!

2021 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாயில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

24 ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றி இதுவரை இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றியாகும். ஆகையால் பாகிஸ்தான் நாடே இந்த வெற்றியை கொண்டாடி வருகிறது.

இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிக்கொண்டிருக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி என்ற பௌலர், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பைக்கு தேர்வாகி விளையாடி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் அவரை இழிவு படுத்தும் விதமாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

Butt-Cinemapettai.jpg
Butt-Cinemapettai.jpg

வருண் சக்கரவர்த்தி பந்து வீசும் ஸ்டைல் பாகிஸ்தான் நாட்டில் ரோட்டோரம் விளையாடி வரும் சிறுவர்கள் பந்து வீசுவது போல் உள்ளது. எந்த சிரமமும் இன்றி அவர் பந்தை நாங்கள் எளிதாக சந்தித்து விளையாடுவோம் என்று பழித்துத்துப் பேசியுள்ளார். இந்த சல்மான் பட் பாகிஸ்தான் அணியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது 5 வருடம் ஊழல் புகாரில் சிக்கி தடை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

varun-Cinemapettai.jpg
varun-Cinemapettai.jpg

Trending News