வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அரவிந்த்சாமியின் உண்மையான அப்பா இவர் இல்ல.. அதிர்ச்சிய கிளப்பிய நடிகர்

Actor Arvind Swamy: 90களில் சாக்லேட் பாயாக இளசுகளின் மனதை கவர்ந்த அரவிந்த் சாமியின் நிஜ அப்பா நான் தான் என பிரபல நடிகர் ஒருவர் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

நிஜமாகவே அரவிந்த்சாமி என்னோட பிள்ளை தான் என சீரியல் நடிகர் பகிரங்கமாக உண்மையை உடைத்து அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார். நடிகர் அரவிந்த்சாமியின் அப்பா நாடகத்தில் நடிக்கும் டெல்லி குமார் என நிறைய பேர் பேசி வந்தனர். ஆனால் உண்மையான அப்பா இல்லை என்றும் கூறிவந்தனர்.

Also Read: தனி ஒருவன் 2க்கு வில்லனாக பாலிவுட் ஜாம்பவான்.. சஞ்சய் தத், ஜாக்கி செராப் வரிசையில் வரும் கமல் ஜெராக்ஸ்

காரணம் நடிகர் அரவிந்த்சாமி தன்னுடைய அப்பா அம்மாவை இழந்து, தன்னை தானே முன்னேற்றி நல்ல நிலையில் தற்பொழுது தொழில் செய்தும் சினிமாவில் நடித்தும் வருகிறார். அரவிந்த்சாமி சினிமாவில் அறிமுகமான போதே இவர் சீரியல் நடிகர் டெல்லி குமாரின் மகன் என சொன்னார்கள்.

ஆனால் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் எவ்வித புகைப்படமும், குடும்ப நிகழ்ச்சியில் கூட இருவரும் சேர்ந்து இருந்தது கிடையாது. ஆனால் இத்தனை வருடங்களாக மறைத்து வைக்கப்பட்ட உண்மை இப்போது நிஜ தந்தை மூலமாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read: சித்தார்த் அபிமன்யு-க்கு நிகர் இவர் தான்.. ஜெயம் ரவியோடு மோத போகும் ஸ்டைலிஷ் வில்லன்

தற்பொழுது ஒரு பேட்டியில் டெல்லி குமார், ‘அரவிந்த்சாமி என் பையன் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. என் அக்காவிற்கு குழந்தை இல்லாததால் அவனை நான் தத்து கொடுத்து விட்டேன். இது அவருக்கு தெரியும், அதனால் எங்கு பார்த்தாலும் நல்லா இருக்கீங்களா என்ற ஒரு வார்த்தை மட்டுமே கேட்பார். என்னை கண்டு கொள்ள மாட்டார்.

காரணம் சின்ன வயதில் தன்னை தத்து கொடுத்து விட்டதால் அவர் என்னை அப்பாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. என் சகோதரியை மட்டுமே தான் ஏற்றுக் கொண்டார். அது அரவிந்த்சாமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. அதை சொல்லும் பொழுது என்ன தான் இருந்தாலும் நம் பிள்ளை என்று ஒரு வருத்தம் டெல்லி குமார் முகத்தில் தெரிந்தது.

Also Read: சித்தார்த் அபிமன்யு கேரக்டருக்கு பதிலாக ரெண்டு வில்லன்கள்.. ஜெயம் ரவியின் தனி ஒருவன் 2 படத்தின் வெறித்தனமான அப்டேட்

Trending News