சினிமாவையும் தாண்டி மக்களிடம் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து அவர் அன்பானவர் தகுதியானவர் என்று பாராட்டு பெறுவது பெரும் கஷ்டம். அப்படி அந்த காலத்திலிருந்து இன்றுவரை இரண்டு ஹீரோக்கள் மட்டுமே அப்பேர்ப்பட்ட ஒரு பெயரை பெற்று எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.
ஜெய்சங்கர்: 1965 ஆம் ஆண்டு ஜோசப் தாலியாத் இயக்கத்தில் வெளிவந்த ‘இரவும் பகலும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜெய்சங்கர். இந்த படத்தில் இவருடன் வசந்தா கதாநாயகியாக நடித்திருப்பார். இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்த அதே காலகட்டத்தில் நடித்தாலும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் நிலவியது. இவர்களைத் தவிர முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடித்திருந்த ஜெய்சங்கர் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் புதிய பரிமாணத்தில் தோன்றி தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர். இவர் பெரும்பாலான படங்களில் துப்பறிவாளன், காவலனாக வேடமேற்று நடித்ததால் ரசிகர்கள் இவரை ‘தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்’ எனவும் ‘தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்’ எனவும் அழைப்பார்கள்.
மேலும் இவருடைய நடிப்பில் வாரம்தோறும் ஏதாவது ஒரு படம் வெள்ளிக்கிழமை அன்று திரையிடப்படுவதால் ‘வெள்ளிக்கிழமை நாயகன்’ என்றும் புகழப்பட்டார். இவர் ஏகப்பட்ட விருதுகளையும் வாங்கிக் குவித்தாலும் ரசிகர்களின் பார்வையில் மகத்தான மனிதன் என்ற பெயரை வாங்கியதையே பெரிய விருதாக கருதுகிறார். அதற்குப் பாத்திரமாக ஜெய்சங்கர் நடித்த காலத்தில் எந்த விதமான சர்ச்சைகளிலும் சிக்காமல் கண்ணியமான மாமனிதனாக வாழ்ந்து மக்கள் மனதை சினிமாவைத் தாண்டி கவர்ந்திருக்கிறார்.
அஜித் குமார்: எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நாயகனாக விளங்கும் தல அஜித், தனக்கென எக்கச்சக்கமான ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். இவருடைய நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களையும் அவருடைய வெறியர்கள் விழாக்கோலம் போல் திரையரங்கையே அமர்க்களப் படுத்துவார்கள்.
நடிப்பைத் தாண்டி அஜித் குமார் கார், பைக் ரேஸில் ஆர்வம் காட்டி தன்னுடைய தனி விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். இதனால் பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி அவ்வபோது நெடும் பயணமாக தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பி, ரசிகர்களுக்கும் சமுதாயத்திற்கும் நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்ல முயற்சிக்கிறார்.
இவருக்கு இருக்கும் பிரபலத்தை எப்பொழுதும் பயன்படுத்தாமல், மிகவும் எளிமையாகவும், ஆடம்பரமான எந்த கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், அரசியலில் துளிக்கூட ஆர்வம் காட்டாமல், இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதால் மற்ற ஹீரோக்களை விட இவர் தனித்துவமாக தெரிகிறார்.
ஆகையால் ஜெய்சங்கர் மற்றும் தல அஜித் இருவரும் இன்று வரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கா த தங்கமான மனிதர் என்று பெயர் எடுத்து வருகின்றனர். எனவே அந்த காலத்தில் ஜெய்சங்கர் போல, இந்த காலத்தில் தல அஜித் என தல ரசிகர்கள் இந்த விஷயத்தை வைத்து சோசியல் மீடியாவை கெத்துக் காட்டுகின்றனர்.