ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நயன், சிம்ரனுடன் ஹீரோவாக நடித்த போது சுத்தமாவே கண்டுக்கல.. வில்லன் ஆனதும் குவியும் வாய்ப்புகள்

 Villain Actor: பிரபல இயக்குனர் ஒருவர் இயக்குவதை நிறுத்திவிட்டு இப்பொழுது முழு நேரமாக நடிக்க வந்து விட்டார். இவர் தமிழ் சினிமாவிற்கு விஜய், அஜித் என பெரிய தலைகளை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அப்படியே போய்க்கொண்டிருந்த இவருக்கு ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. நாமளும் ஹீரோவாக நடிப்போம் என பெரிய பெரிய ஹீரோயின்களுடன் ஜோடி போட்டார்.

90களின் இறுதியில் அஜித்தை வைத்து ஆசை என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் தான் இயக்குனரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா. அதன் தொடர்ச்சியாக விஜய்க்கு குஷி என்ற வெற்றி படத்தை கொடுத்த இவருக்கு, தானும் ஹீரோவாக வேண்டும் என 2004ல் நியூ என்ற படத்தை அவரே இயக்கி தயாரித்து நடித்து வெளியிட்டார்.

Also Read: SJ சூர்யா போர் அடித்ததால் கருநாகத்துடன் இணையும் பிரியா பவானி.. சுட சுட வெளியான அப்டேட்

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்தார். இவர்களுடன் இன்னும் தேவயானி, கிரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்தப் படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும் இதில் எஸ்ஜே சூர்யாவின் ஓவர் ஆக்சனை பார்ப்பதற்கே எரிச்சல் மூட்டும் வகையில் இருந்தது.

அடுத்தும் இவர் ஹீரோவாக நடித்த கள்வனின் காதலி படத்தில் நயன்தாராவுடன் ஜோடி போட்டார். அந்த படமும் படு தோல்வியாக அமைந்தது. அப்படியும் அடங்காத எஸ்ஜே சூர்யா தொடர்ந்து அன்பை ஆருயிரே, இசை சமீபத்தில் வெளியான பொம்மை நாயகி போன்ற படங்களிலும் தன்னுடைய ஹீரோ ஆசையை தீர்த்துக் கொண்டு வருகிறார்.

Also Read: சிம்ரன், த்ரிஷாவுக்கு அப்புறம் நீங்க தான் டாப்பு.. 50 வயதிலும் பிரியா பவானிக்கு தூண்டில் போடும் இயக்குனர்

இருப்பினும் அந்தப் படங்களில் ஒரு படம் கூட சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. இருப்பினும் ஹீரோவாக அவரைக் கண்டு கொள்ளாத ரசிகர்கள் இப்போது வில்லனாக நடிக்கும் போது தங்களது அமோக ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் எஸ்ஜே சூர்யாவுக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

தற்போது இருக்கும் டாப் நடிகர்களின் படங்களில் யார் வில்லனாக நடிக்க வேண்டும் என யோசித்தால், முதலில் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் எஸ்ஜே சூர்யாவின் பெயர் தான் உதிக்கிறது. அந்த அளவிற்கு அவருடைய மவுசு கூடிவிட்டது.

Also Read: வடிவேலு போல இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டே எஸ்ஜே சூர்யா.. செக் வைத்த தயாரிப்பாளர்

Trending News