ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கடைசி வரை அட்லியை கண்டுக்காம கழட்டி விட்ட தளபதி.. சன் பிக்சர்ஸ் கூட்டணியில் இணைந்த அக்கட தேசத்து டாப் நடிகர்

Hero of Atlee’s next film: தமிழில் விஜய் வைத்து தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று ஹிட் படங்களை கொடுத்த தளபதியின் ஆஸ்தான இயக்குனரான அட்லி, ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். ஷாருக்கான் வைத்து ஹிட் கொடுத்த பிறகு அட்லி மறுபடியும் இந்தி நடிகர்களின் படங்களை தான் இயக்குவதாக சொல்லப்பட்டது.

சல்மான்கான், ஷாருக்கான் என்று தொடர்ந்து பாலிவுட் நடிகர்களின் படங்களை இயக்குவதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்ல அட்லி அடுத்ததாக விஜய் மற்றும் சன் பிச்சர்ஸ் கூட்டணியில் படம் பண்ண போவதாகவும் செய்திகள் கசிந்தது.

ஆனால் இப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அக்கட தேசத்து நடிகருடைய படத்தை தான் அட்லி அடுத்து இயக்கப் போகிறார். எப்படியாவது விஜய் வாய்ப்பு கொடுப்பார் என கடைசி வரை காத்துக்கொண்டிருந்த அட்லியை தளபதி கழட்டிவிட்டார்.

Also Read: வருசத்துக்கு 2 டார்கெட், சரியான பாதையில் AK.. விஜய்க்கு பயத்தை காட்டும் அஜித்தின் மூவ்

அட்லி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ

இனியும் விஜய்யை நம்பினால் பிரயோஜனம் இல்லை என்று தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படம் தான் அட்லியின் அடுத்த ப்ராஜெக்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. லியோ படத்திற்கு பிறகு விஜய் ‘தளபதி 68’ பட வாய்ப்பை அட்லிக்கு தான் கொடுப்பார் என எல்லோரும் நினைத்தனர்.

ஆனால் கடைசி வரை விஜய், தம்பி அட்லியை கொஞ்சம் கூட கண்டுக்காமல் போய்விட்டார். இருந்தாலும் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா 2’ படத்திற்கு பிறகு அட்லியின் படத்தில் தான் இணைய போகிறார். இந்த காம்போ எந்த அளவிற்கு வொர்க் அவுட் ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: கமல் முதல் சிம்பு வரை அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள்..100 கோடினா வாடி! இல்லாட்டி போடி! கோலிவுட்டை தெறிக்க விடும் நடிகர்கள்

Trending News