புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக்பாஸில் முதல் ஆளாக வெளியேற போவது அனன்யா இல்லையாம்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்து அனுப்பிய கமல்

Biggboss 7: பிக்பாஸ் தொடங்கினாலும் தொடங்கியது சோசியல் மீடியா முழுவதும் ஒரே பரபரப்பாக தான் இருக்கிறது. அதிலும் முதல் வாரமே போட்டியாளர்கள் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு கன்டென்ட் கொடுப்பது விஜய் டிவியையும் குஷிப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இந்த வாரம் விசித்ரா, ஜோவிகா இருவரின் பஞ்சாயத்து தான் களை கட்டியது. அதை இன்று வெளியான ப்ரோமோவிலும் ஆண்டவர் கையில் எடுத்திருந்தார். அதனாலேயே யார் பக்கம் தீர்ப்பு சாதகமாக அமையும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Also read: பிக் பாஸ் 7ல் இந்த வாரம் வெளியேறப் போகும் முதல் நபர்.. ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளாக யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக முதல் வாரம் நாமினேஷன் இருக்காது. இத்தனை சீசன்களில் இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால் எதிர்பாராததை எதிர்பார்ப்பது தானே பிக்பாஸ்.

அந்த வகையில் இந்த வாரம் பவா செல்லதுரை, பிரதீப் ஆண்டனி, அனன்யா, ரவீனா, ஐசு, யுகேந்திரன், ஜோவிகா ஆகியோர் நாமினேஷனில் சிக்கினார்கள். இதில் அனன்யா தான் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராகவும் குறைந்த வாக்குகளை பெற்றவராகவும் இருக்கிறார் என இணையத்தில் செய்திகள் பரவியது.

Also read: ஆன்ட்டி வெறியனா இருப்பானோ.! மூணு பிள்ளைய பெத்த விசித்திராவை படுக்க கூப்பிட்டு அசிங்கப்பட்ட சைக்கோ

அதைத்தொடர்ந்து அவரே எலிமினேட் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி யுகேந்திரன் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாராம். அவர்தான் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் விதிமுறைப்படி இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற உள்ளார்.

இது நிச்சயம் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் தான். ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் யுகேந்திரன் ரொம்பவும் பக்குவமானவராகவும் ரசிகர்களுக்கு பிடித்தமானவராகவும் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை வெளியே அனுப்பி ஆண்டவர் கடும் அதிர்ச்சியை கொடுத்து விட்டார்.

Also read: விசித்ரா, ஜோவிகா யார் பக்கம் நியாயம்.. அனல் பறக்கும் ஆண்டவரின் தீர்ப்பு

Trending News