செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சண்டை போட்டாலும் பாலாவை விட்டுக் கொடுக்காத ஒரே நடிகர்.. வளர்த்து விட்டவருக்கு இன்றுவரை காட்டும் கரிசனம்

An Actor does not give up Director Bala: தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களின் பாலா தனி ரகம். இவர் எடுக்கும் படங்களின் மூலமே தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்வார். இவர் இப்போது அருண் விஜய்யை வைத்து வணங்கான் என்ற படத்தை விறுவிறுப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் முதலில் சூர்யாவை வைத்து தான் துவங்கப்பட்டது.

ஆனால் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன் பின்பு வணங்கான் படத்தில் அருண் விஜய் இணைந்துள்ளார். இப்படி பாலா எடுக்கிற எல்லா படத்திலும் ஹீரோக்களுடன் கருத்து மோதல் மற்றும் கைகலப்பில் ஈடுபடுகிறார்.

இதனாலேயே இவருடைய படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் யாருமே அவ்வளவு சீக்கிரம் முன் வருவதில்லை. இவர் என்னதான் எல்லோருடனும் சண்டை போட்டாலும் இன்று வரை பாலாவை ஒரே ஒரு நடிகர் மட்டும்தான் விட்டுக் கொடுக்காமல் அவரை தலையில் தூக்கி வைத்து பேசுகிறார். நடிகர் கருணாஸ் பாலாவின் இயக்கத்தில் வெளியான நந்தா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

Also Read: வெறிபிடித்த சிங்கமாக வேட்டையாடும் அருண் விஜய்.. மிரட்டும் பாலாவின் வணங்கான் டீசர்

ஏற்றிவிட்ட ஏணியை மறக்காத கருணாஸ்

இந்த படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ என்ற கேரக்டரில் கருணாஸ் நடித்த பிறகுதான் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்து, கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார். இன்றும் அவரை கருணாஸ் என அழைப்பதை காட்டிலும் லொடுக்கு பாண்டி என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.

அந்த அளவிற்கு அவருக்கு தனி ஒரு அடையாளத்தை தந்தவர் பாலா தான். சினிமாவை தாண்டி இப்போது அரசியலிலும் அடி எடுத்து வைத்து, எம்எல்ஏ-வான கருணாஸ், இப்போது படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவர் அளிக்கும் பேட்டிகளில் எப்போதுமே பாலாவை விட்டுக் கொடுத்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அதோடு, ‘இப்ப கூட பாலா கூப்பிட்டால் என்னை வளர்த்து விட்டவருக்காக நடிப்பேன்’ என்று கூறுகிறார்.

Also Read: அஜித்துக்காக எழுதப்பட்ட 5 கதைகள்.. முதல் கோணல் முற்றிலும் கோணலாய் முடிந்த பாலாவின் நட்பு

Trending News