சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இன்று வரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனை..100-வது, 200-வது படமும் நடித்த ஒரே ஹீரோ

கோலிவுட்டில் தன்னுடைய திறன் பட்ட நடிப்பால் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர், இன்று வரை தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய எந்த நடிகராகும் அவருடைய சாதனையை முறியடிக்க முடியாத அளவுக்கு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்.

இவருடைய தமிழ் உச்சரிப்பு, நடிக்கும் போது இவரின் கண், உதடு, கண்ணம், புருவம் என அனைத்துமே இவருடைய நடிப்பை பிரதிபலிக்கும். அந்த அளவிற்கு நடிப்பில் ஜாம்பவானாக இருந்த செவாலியர் சிவாஜி கணேசனை மக்கள், ‘நடிகர் திலகம்’, ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என வாயாரப் புகழ்ந்தனர்.

Also Read: சிவாஜியை பாலோ செய்த விஜய்.. இயக்குனரையே ஆச்சரியப்படுத்திய சம்பவம்

இவர் நடித்த கப்பலோட்டிய தமிழன், ராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல படங்கள் காண்போரின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது. அது மட்டுமல்ல பல உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதா சாகேப் பால்கே போன்ற விருதுகளுக்கும் சொந்தக்காரர்.

சிவாஜி செய்த சாதனைகள் தமிழ் சினிமாவில் நிறைய இருக்கின்றன. அது இன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை. இவருடைய 100வது படமான நவராத்திரி, 200-வது படமான திரிசூலம் போன்ற இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது.

Also Read: கொடுத்த வாக்கை நம்பி சம்பளம் வாங்காமல் நடிக்கும் 5 நடிகர்கள்.. இன்றுவரை போற்றப்படும் ஜெய்ஷங்கர்

தமிழ் சினிமாவின் முதல் நூறாவது படத்தை நடித்த முதல் நடிகர் இவர் தான். அதேபோல் 200 படத்தை நடித்த முதல் நடிகரும் இவர்தான். தான் நடித்த இரண்டு படமும் ஒரே நாளில் வெளியிட்ட முதல் நடிகர் இவர் தான். இப்போது பல நடிகர்கள் இதை செய்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கு முன்னோடி சிவாஜி தான். தான் நடித்த இரண்டு படமும் ஒரே நாளில் வந்தது, அதுவும் 17 முறை வந்ததும் குறிப்பிடத்தக்கது. இது இவர் நிகழ்த்திய மாபெரும் சாதனை. இந்த சாதனையை 100 வருட சினிமாவில் இதுவரை யாரும் செய்ய முடியவில்லை.

Also Read: அழகில் மயங்கி காதலைச் சொன்ன ஹீரோக்கள்.. உதவி இயக்குனரை திருமணம் செய்து நிம்மதியை தொலைத்த சிவாஜி பட நடிகை

Trending News