வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இந்தியாவிலேயே அவர்தான் ஒரே சூப்பர் ஸ்டார், மறுத்த 3 பாலிவுட் ஹீரோக்கள்.. மறுப்பு தெரிவிக்காத விஜய்யின் பேராசை

சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கான இடம். இது அவரே ஆசைப்பட்டு வாங்கிக் கொண்ட பட்டம் கிடையாது. அவருடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கு மக்கள் கொடுத்த மகுடம். அடைமொழியான சூப்பர் ஸ்டார் என்பதை சொன்னால் மட்டுமே போதும் இந்தியா முழுக்க ரஜினி தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தை கூட சொல்லும் என்று அவரது படத்திலிருந்து ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் பல விழா மேடைகளில் மிகப்பெரிய சினிமா ஜாம்பவான்களான அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், ஷாருக்கான் போன்றவர்களை அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் என்று சில பிரபலங்கள் புகழ்வார்கள்.

Also Read : இப்ப அஜித் இல்ல, ரஜினி ரசிகர்களை சீண்டி விட்ட தயாரிப்பாளர்.. வாரிசு மேடையில் வேண்டாத பேச்சு

அதே மேடையில் அந்த நடிகர்கள் இதை மறுத்து இந்தியாவிலேயே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் என்றுதான் கூறியுள்ளனர். இவ்வாறு பாலிவுட்டில் முன்னணி நடிகர்களே சூப்பர் ஸ்டார் என்பது ரஜினி தான் என்ற உறுதியாக உள்ளனர். அதுமட்டுமின்றி சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் எப்போது பேசினாலும் இந்தியாவில் ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தளபதி விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று சில பிரபலங்கள் கூறியுள்ளனர். அதாவது விஜய் தற்போது நடித்துள்ள வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் பிரம்மாண்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் வாரிசு படத்தில் நடித்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Also Read : மகள் முறை பிரபலத்தை ஜோடியாக நடிக்க கேட்ட ரஜினி.. அதிர வைக்கும் முத்து பட மீனாவின் சீக்ரெட்

அந்த வகையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் சரத்குமார். மேலும் இந்த படத்தை தயாரித்த தில் ராஜு மற்றும் சரத்குமார் இருவரும் மேடையில் பேசும்போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறியிருந்தனர். இதற்கு விஜய் எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதித்தார்.

இதிலிருந்து விஜய்க்கும் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற பேராசை இருப்பதாக சிலர் கூறி வருகிறார்கள். அப்படி இல்லை என்றால் நேரடியாகவே மேடையில் கூறும்போது அதற்கு மறுப்பு தெரிவித்து, சூப்பர் ஸ்டார் என்ற இடம் ரஜினிக்கு மட்டும்தான் என்று சொல்லி இருப்பார். தனக்கும் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு வர வேண்டும் என்ற ஆசையில் தான் விஜய் மறுப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

Also Read : தளபதி 67க்கு மொத்த ஃபிளானும் ரெடி.. ஆறு மாசம் அட்ராசிட்டி பண்ண போகும் லோகேஷ், விஜய்

Trending News