லியோ படத்திற்கு பிறகு விஜய்யின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் படம் தான் தளபதி 68. ரசிகர்களின் பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில் ஒப்பந்தமாகியுள்ளது. இந்நிலையில் மாநாடு படவெற்றிக்கு இவர் தான் காரணம் என்னும் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு பட வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் ஒன் லைன் ஸ்டோரிக்கு ஓகே சொல்லி தன் கால்ஷீட்டை கொடுத்திருக்கிறார் விஜய். இதற்கு காரணமாக பார்க்கையில் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா பட வெற்றியும், மேலும் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளிவந்த மாநாடு படமும் தான்.
Also Read: வெளியில் தலை காட்டாமல் இருக்கும் வெங்கட் பிரபு.. தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிய லோகேஷ்
இவ்விரு படங்களையும் தன் மனதில் வைத்துக் கொண்டு தான் படத்திற்கு ஒப்புதல் கூறியிருக்கிறார் விஜய். இந்நிலையில் மாநாடு படத்தில் உள்ள வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான கதைக்கு காரணம் அப்படத்தின் எழுத்தாளரான லியாகத் அலி தான். இவரின் இத்தகைய முயற்சி இல்லை என்றால் இப்படம் தோல்வியை சந்தித்திருக்கும்.
இதை அறிந்த விஜய், தான் ஒப்புக்கொண்ட தளபதி 68 படத்தில் இந்த முக்கிய நபர் இடம் பெற்றே ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார். இக்காரணத்தால் தான் நான் இப்படத்தை ஒப்புக் கொண்டேன் என்று தெளிவுபட வெங்கட் பிரபுவிடம் வலியுறுத்தியுள்ளார். இதை இவர் சாத்தியப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read: தோல்வி இல்லாமல் அஜித், விஜய்யை இயக்கிய ஏழு இயக்குனர்கள்.. 8-வதாக வந்து சேர்ந்த வெங்கட் பிரபு
இது அல்லாது வெங்கட் பிரபு வேறு எந்த முயற்சி எடுத்தாலும் அது சாதாரண படமாக தான் பேசப்படும் என்றும் விஜய் நேரடியாக கூறிவிட்டாராம். இது அனைத்தும் வெங்கட் பிரபுவின் கையில் தான் இருக்கிறது என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இதை தொடர்ந்து இத்தகைய கோரிக்கைகளை வெங்கட் பிரபு நிறைவேற்றும் படலத்தில் இறங்கி இருக்கிறாராம்.
மேலும் படத்தின் பெயர் என்னவா இருக்கும் மற்றும் இப்படத்தில் கதாநாயகி யாராக இருக்கும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இத்தகைய கேள்விக்கும் வெங்கட் பிரபு பதிலடியாக படத்தின் வெற்றியை கொடுப்பார் எனவும் நம்பப்படுகிறது. மேலும் இதில் சிக்கிக் கொண்ட விஜய்யின் தலை தப்புமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Also Read: விஜய் கூட சண்டை முத்தினதுக்கு முக்கிய காரணம் அவங்க தான்.. வெளிப்படையாக கூறிய எஸ்ஏசி