பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முடிவுக்கு வந்தது. பெரும்பாலான ரசிகர்கள் விக்ரமன் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் அசீம் டைட்டில் வின்னர் என தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மேலும் 50 லட்சம் ரொக்க பணமும் அசீமுக்கு தான் கிடைத்துள்ளது. இந்நிலையில் விக்ரமன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதாவது விக்ரமன் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். அதன் பின்பு அரசியல் மீதுள்ள ஈடுபாடு காரணமாக அரசியல் கட்சியில் செயல்பட்டு வந்தார். அதுமட்டுமின்றி பத்திரிக்கையாளராக தன் மனதில்பட்ட விஷயங்களை நேரடியாக கேட்கக் கூடியவர்.
Also Read : அசீம் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது.. விஜய் டிவிக்கு எதிராக இணையத்தில் கொந்தளித்த கூட்டம்
இந்நிலையில் ரசிகர்கள் விக்ரமனுக்கு ஆதரவு கொடுத்து வந்தாலும் அரசியல் கட்சியினரும் விக்ரமனுக்கு வாக்கு சேகரித்தனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அன்புத்தம்பி விக்ரமனுக்கு வாக்களிக்குமாறு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இவ்வாறு ஒரு அரசியல் கட்சியின் ஆதரவை விக்ரமன் பெற்றுள்ளதால் விஜய் டிவி அவருக்கு டைட்டில் வின்னர் பட்டத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே பல விஷயங்களில் வேண்டுமென்றே விக்ரமனை விஜய் டிவி புறக்கணித்து வந்தது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
Also Read : பொண்டாட்டிங்க தொல்லையால் மார்க்கெட் இழந்த நடிகர்.. பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்தும் ப்ரோஜனம் இல்ல
மேலும் ரசிகர்களின் ஓட்டினால் இறுதிவரை வந்த விக்ரமனை விஜய் டிவி தோல்வி அடைய செய்துள்ளது. பிக் பாஸ் மேடையில் விக்ரமன் தோற்றாலும் மக்கள் மனதை வென்று விட்டார். கடந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஆதரவை ரசிகர்கள் விக்ரமனுக்கு கொடுத்து வருகிறார்கள்.
இப்போது அசீம் வெற்றியால் பிக் பாஸ் ரசிகர்கள் விஜய் டிவி மீது உச்சகட்ட விரக்தியில் உள்ளனர். டைட்டில் வின்னர் பட்டத்தை சிவினுக்கு கொடுத்திருந்தாலும் ரசிகர்கள் இந்த அளவுக்கு கொந்தளிப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆனால் விக்ரமனை வீழ்த்த அசீமை வெற்றியாளர் ஆக்கியது அருவருக்கத்தக்க விஷயம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.