செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

32 வருஷமா விஜய்க்கு போட்டி இவர்தான்.. வாரிசு ஆடியோ லான்ச்சில் தெறிக்க விட்ட பேச்சு

வாரிசு படத்தில் ஆடியோ லான்ச் பங்க்ஷன்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று செம ட்ரீட் கொடுத்து இருந்தார் தளபதி விஜய். அவர் என்ட்ரியிலிருந்து பேசி முடிப்பது வரை கைதட்டல் பறந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அவரது குரலை கேட்க காத்திருந்த ரசிகர்களுக்கு விஜய் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் எந்த ஒரு துறையை சேர்ந்தாலும் போட்டி இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை ஒரு குட்டி ஸ்டோரி மூலம் அழகாக கூறியுள்ளார். அதாவது 1990களில் தனக்கு போட்டியாக ஒரு நடிகர் வந்தார். அவருக்கு கிடைத்த வெற்றி என்னை மேலும் போராடச் செய்தது. அதற்காக கூடுதலாக ஓடினேன். அவரைவிட வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்பினேன்.

Also Read : முழு எனர்ஜியுடன் வந்த விஜய்.. இனிமே இப்படித்தானாம், புது ஸ்டைலில் மேடையில் நடந்த சுவாரஸ்யம்

அந்த நடிகர் 1992-ல் உருவானார் என்று விஜய் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் அனைவரும் அஜித்தை பற்றி தான் விஜய் கூறுகிறார் என்று எண்ணியிருந்தனர். ஏனென்றால் எல்லா காலகட்டத்திலுமே இரு நடிகர்கள் இடையே போட்டி நிலவி வரும் நிலையில் அஜித், விஜய் ரசிகர்கள் இடையே எப்போதுமே போட்டி உள்ளது.

ஆனால் வாரிசு ஆடியோ லாஞ்சில் கடைசியாக அந்தப் போட்டியாளர் வேறு யாருமில்லை ஜோசப் விஜய் என்ற தனது பெயரையே கூறி உள்ளார். 32 வருடங்களாக தனக்கான போட்டியாளராக தன்னையே தேர்ந்தெடுத்துள்ளார் விஜய். எப்போதுமே வாழ்க்கையில் முன்னேற ஒரு போட்டியாளர் கண்டிப்பாக தேவை.

Also Read : பாடல் வரி மூலம் பதிலடி கொடுக்கும் விஜய், அஜித்.. பற்றி எரியும் சோசியல் மீடியா

உங்களுக்கு நீங்களே போட்டியாளராக தேர்வு செய்து கொண்டால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்பதை விஜய் கூறியுள்ளார். இவ்வாறு தளபதியின் ஒவ்வொரு தெறிக்க விட்ட பேச்சுக்கும் அரங்கமே விசில் சத்தம் எழுந்தது. மேலும் விஜய் ஆடியோ லான்ச்சில் பேசிய வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதன் மூலம் வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதை எப்படி ஓவர் டேக் செய்து துணிவு படத்தை பிரமோஷன் செய்வது என்ற குழப்பத்தில் படக்குழுவினர் உள்ளனர். இதனால் துணிவு படத்தின் மூன்றாவது பாடலை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Also Read : தில் ராஜுவால் விஜய்க்கு வந்த பேராபத்து.. ஊம கோட்டானாக இருந்து ஸ்கோர் செய்த அஜித்

Trending News