வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்தில் ஆரம்பித்து, விஜய் படத்தில் கிடைத்த பெரிய சக்சஸ்.. தன் அப்பாவை மனதில் வைத்து எடுத்த இயக்குனர்

அஜித் மற்றும் விஜய்யை வைத்து படம் எடுக்க முயலும் இயக்குனர்கள் ஏராளம். அவ்வாறு தன் அப்பாவின் கதாபாத்திரத்தை கொண்டு வெற்றி கண்ட இயக்குனரின் நெகிழ வைத்த சம்பவத்தை பற்றி இங்கு காணலாம்.

பன்முகத் திறமை கொண்டு தமிழ் சினிமாவில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் எஸ் ஜே சூர்யா. படிப்படியாக முன்னேற்றத்தை பெற்ற இவர் தற்பொழுது தனக்கு தகுந்தவாறு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று கலக்கி வருகிறார்.

Also Read: அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டைய போட போகும் ஜீவானந்தம்.. ஏமாந்து நிற்கும் குணசேகரன் ஜனனி

தன் ஆரம்ப காலத்தில் அஜித்தின் ஆசை படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றினார். அப்பட வெற்றிக்கு பிறகு அஜித்தின் நடிப்பில் மாறுபட்ட கதையில் இவர் இயக்கிய படம் தான் வாலி. இது இவருக்கு நல்ல விமர்சனங்களை தந்து மெகா ஹிட் படமாக அமைந்தது.

அஜித்துடன் இவர் கண்ட வெற்றியை அறிந்து அடுத்தடுத்த படங்கள் இவரின் கைவசம் வந்துள்ளது. அவ்வாறு தான் எஸ் ஏ சந்திரசேகர் இடமிருந்து இவருக்கு அழைப்பு வந்ததாம். அதைத்தொடர்ந்து எஸ் ஜே சூர்யா விஜய்யை வைத்து இயக்கிய படம் தான் குஷி. இப்படமும் இவருக்கு பெரிய சக்சஸ் ஆக அமைந்தது.

Also Read: ரம்மி நடிகரை உதாசீனப்படுத்திய நடிகை.. ஹீரோயின் திருமணத்தால் அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

அதற்கு காரணமாக பார்க்கையில் இப்படத்தில் நடித்த விஜயகுமாரின் கதாபாத்திரம் அப்படியே தன் அப்பாவை பிரதிபலிக்கும் படி இயக்கினாராம் எஸ் ஜே சூர்யா. அதை தான் சொன்னபடியே விஜயகுமார், ஜோதிகாவிற்கு அப்பாவாக சிறப்புற நடித்து காட்டினாராம்.

இன்று வரை அந்தப் படத்தை பார்த்தால் தன் தந்தையை நினைவு கொள்வாராம் எஸ் ஜே சூர்யா. மேலும் தன் தந்தையின் நினைவாக இப்படம் இருந்தாலும், விஜயகுமாரின் தத்ரூபமான நடிப்பு கூடுதல் சிறப்பை பெற்று தந்தது என்று நிகழ்ந்து பேசி வருகிறார் எஸ் ஜே சூர்யா.

Also Read: விஜய் பட வில்லனை உறுதி செய்த மகிழ் திருமேனி.. நியூ லுக்கில் மிரட்ட வரும் ஏகே

Trending News