வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பீதியை கிளப்பும் சுகாதாரத்துறை.! உருமாறிய கொரோனா பரவி வருகிறது. அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்.

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அப்பொழுது பல்வேறு வகையான உருமாறிய கொரோனா வைரஸ் பரவிக்கொண்டே வருவதாக கூறினார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுற்றுலா பயணியாக தான் இங்கு வந்தபோது, இந்தப் பகுதியில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை என்பதையும். அப்படிஇல்லாததற்கு காரணம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தாலும் தற்போது பல்வேறு வகையான உருமாறிய கொரோனா பரவிக்கொண்டே வருகிறது. இரண்டாம் அலை முடிவுக்கு வந்தாலும் மூன்றாம் அலை வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Corona-Injection-Cinemapettai.jpg
Corona-Injection-Cinemapettai.jpg

இதனால் தமிழக முதல்வர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறி உள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 12 இலட்சத்து 20 ஆயிரத்து 629 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் மட்டுமே சுற்றுலா பயணிகள் அச்சமின்றி இங்கு வந்து செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

 

Trending News