வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. மக்கள் கொண்டாட்டம்

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் மழை பெய்யும்போது சென்னையில் மட்டும் மழை வராமல் வானம் ஓரவஞ்சனை செய்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இன்று அதிரடி மழையை அடித்து வானம் குளிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. மேலும் நாளையும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காலை 10 மணி முதல் அடிக்க தொடங்கிய மழை மதியம் வரை அடித்து விட்டது. மேலும் இன்று காலை 8 மணிக்கு வந்த வெயிலை பார்த்தால் இன்று வெயில் வச்சி செய்ய போகிறது என்று நினைத்திருந்த மக்களுக்கு இந்த திடீர் மழையால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மீண்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் என சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையத்தில் இருந்து செய்திகள் வந்துள்ளதால் எல்லாம் குஷியில் உள்ளனர். அதே நேரம் இன்று விடுமுறை நாள் என்பதால் வீட்டிலிருந்தே மழையை அனுபவித்து வருகின்றனர் மக்கள். அதேநேரம் சென்னை அதிகமான மழையையும் தாங்காது அதனால் சிலர் சிறிய கலக்கத்திலும் உள்ளனர்.

Trending News