திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கெஞ்சி பட வாய்ப்பு கேட்ட வாரிசு நடிகர்.. ஒரே படத்தின் வெற்றியால் எகிறிய பிரதீப் மார்க்கெட்

தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் கொண்டாடப்பட்டு வரும் லவ் டுடே திரைப்படம் வசூலிலும் பல சாதனை புரிந்து வருகிறது. பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் வெளியாகி பத்து நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த அளவுக்கு இந்த திரைப்படம் இன்றைய தலைமுறையை அதிகம் கவர்ந்துள்ளது. மொத்தமாக லவ் டுடே படம் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. முதல் நாளில் 3 கோடி வசூல் செய்தது. பத்து நாட்களில் இந்த படம் 50 கோடியை வசூலி செய்து மாஸ் காட்டி இருக்கிறது.

Also Read: காம பிசாசுகளுக்கு ரூட் போட்டுக்கொடுத்த லவ் டுடே பிரதீப்.. காட்சிகளை தூக்க வேண்டுமென வலுக்கும் எதிர்ப்பு

இதனால் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக லவ் டுடே படத்தின் மூலம் பிரதீப் டஃப் கொடுத்துள்ளார். அத்துடன் ஒரே படத்தின் வெற்றியால் அவருடைய மார்க்கெட் எகிறியது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதரிடம் வாரிசு நடிகர் ஒருவர் வெளிப்படையாக வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

‘சார் தயவு செஞ்சு உங்க அடுத்த படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க சார்’ என இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் ட்விட்டர் மூலம் நடிகர் பிரேம்ஜி வாய்ப்பு கேட்டிருக்கிறார். இதற்கு முன்பே 2014 இல் பிரதீப் ரங்கநாதன் தனது ‘வாட்ஸ் அப் காதல்’ குறும்படத்தின் லிங்கை பிரேம்ஜி இடம் பகிர்ந்து ‘பிடிச்சிருந்தா ஷேர் செய்யுங்க சார்’ என கேட்டிருக்கிறார்.

Also Read: லவ் டுடே ரிலீஸுக்கு முன்பே அட்வான்ஸ் கொடுத்து லாக் செய்த சூர்யாவின் மாமா.. அடுத்தடுத்து பிசியாகும் பிரதீப்

ஆனால் அப்போது கண்டுகொள்ளாத பிரேம்ஜி, 8 வருடம் கழித்து அந்த ட்விட்-க்கு பதில் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரிடமே தனக்கு வாய்ப்பு தருமாறு கெஞ்சி கேட்டிருப்பதும் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

எனவே லவ் டுடே படத்தின் மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து பிரதீப்பிடம் பெரிய பெரிய நடிகர்கள் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவருடைய அடுத்தடுத்த பட அப்டேட்டை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: ஓவர் நைட்டில் பிரபலமான லவ் டுடே பிரதீப்.. மேடையில் உச்சகட்ட டென்ஷன் ஆனா உதயநிதி!

Trending News