செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

வாரிசு நடிகரை நம்பி ஏமாந்த பிரியா ஆனந்த்.. கழட்டி விட்டதால் பரபரப்பை கிளப்பிய பயில்வான்

Priya Anand: சினிமாவில் ஒன்று அல்லது இரண்டு படத்தில் நடித்தால் அந்த நடிகருடன் கிசுகிசுக்கப்படுவது சர்வ சாதாரணமாகத்தான் இருக்கிறது. சில நடிகைகள் தங்களுடன் நடித்த நடிகர் மீது காதல் வயப்பட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு இந்த திருமணம் நீடித்தாலும் பலர் விவாகரத்து தான் பெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் பிரியா ஆனந்த் வாரிசு நடிகர் ஒருவரை நம்பி ஏமாந்து போய்விட்டதாக சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது ஆரம்பத்தில் ஹிட் படங்கள் கொடுத்து வந்த பிரியா ஆனந்த் நடுவில் மிகப்பெரிய பிரேக் எடுத்து விட்டார். இதற்குக் காரணம் அவருடைய காதல் தோல்வி தானாம்.

Also Read : தளபதி படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லாமல் எப்படி?. லியோவின் அதிரடியான அப்டேட்

அதன் பிறகு தனது மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் படங்களில் நடிக்க வந்து விட்டார். அந்த வகையில் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தில் பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவர் பெரிதும் நம்பி இருக்கிறாராம்.

இந்நிலையில் நடிகர் முரளியின் வாரிசாக சினிமாவில் நுழைந்தவர் தான் அதர்வா. ஆரம்பத்தில் ஹிட் படங்கள் கொடுத்து வந்த இவர் சமீப காலமாக தொடர் தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அவருடைய பழக்க வழக்கம் மற்றும் நடவடிக்கையும் சரியில்லை என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also Read : அஜால் குஜால் ராஜ வாழ்க்கை வாழும் 5 இளசுகள்.. சிம்பு புரோவை மிஞ்சும் அதர்வா அண்ட் கோ

இந்நிலையில் பிரியா ஆனந்த் மூன்று வருடங்களாக அதர்வாவுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக பயில்வான் கூறியிருக்கிறார். மேலும் இருவரும் நன்றாக பழகி வந்த நிலையில் அதன் பிறகு இனி இந்த உறவு வேண்டாம் என்று அதர்வா முறித்துக் கொண்டதாக கூறியிருக்கிறார்.

இந்த மனவேதனையில் தான் பிரியா ஆனந்த் சிறிது காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் படு பயங்கரமாக படங்களில் பிஸியாகி இருக்கிறார் என பயில்வான் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது உண்மையா என்று தங்களது சந்தேகத்தை எழுப்பி வருகிறார்கள்.

Also Read : திருட்டு காசுல படம் எடுக்கிற தங்கர் பச்சான் , ரஜினிய பத்தி பேசுன நாரடிச்சிடுவோம்.. எரிமலையாக வெடித்த பயில்வான்

Trending News