கலை குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகர் ஒருவர் திருமண வயதை கடந்தும் தற்போது வரை சிங்கிளாகவே சுற்றித் திரிகிறார். அதாவது அப்பா, அண்ணன் என எல்லோருக்குமே சினிமாவில் பேரும், புகழும் கிடைத்தது. தம்பி அவ்வப்போது படங்களில் தலையை காட்டி வருகிறார்.
மேலும் இன்னும் தனது இளைய மகனுக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் பல பெண்களை பார்த்துள்ளார் அப்பா. ஆனால் மாப்பிள்ளையை பற்றி விசாரித்து பெண் கொடுக்கவே தயங்கி பலரும் மறுத்துவிட்டார்கள். ஏனென்றால் மனுஷன் பகலிலேயே முழு நேர குடிகாரன் தான்.
Also Read : பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ
அதுமட்டுமா கவர்ச்சி நடிகைகளுடன் குத்தாட்டமும் போட்டு வருகிறார். எப்போதுமே ஒரு செட்டு சேர்ந்து கொண்டு பார்ட்டி, பப் என்று சுற்றி வருகிறார். பிரபல நடிகை ஒருவர் இவர் எல்லை மீறி நடந்து கொண்டதாக புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் இதற்கு மேலும் நடிகருக்கு திருமணம் ஆகுமா என்பது சந்தேகம்தான்.
ஆனால் நடிகருக்கோ திருமணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லையாம். கல்யாணம் என்று ஒன்றில் சிக்கிக்கொண்டால் தற்போது இருப்பது போல் சுதந்திரமாக அவரால் சுற்றித் திரிய முடியாது. ஏதாவது வீட்டில் காரணம் சொல்லி திருமணத்தை தட்டி கழித்து வருகிறாராம்.
இதனால் நடிகரின் அப்பா மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம். ஆனால் மகன் இவ்வாறு குடியும், கும்மாளமும் ஆக இருக்கிறாரே இதைப் பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறீரே என பலரும் இவரை கேட்டதுண்டு. இந்த வயசில் தானே சந்தோசமாக இருக்க முடியும், எனக்கு தெரிந்துதான் இதை எல்லாம் செய்கிறார் என மகனுக்கு வக்காலத்து வாங்கி வருகிறார்.
Also Read : நெருக்கமான காட்சியில் நடிக்க தயங்கிய நடிகர், நடிகை.. கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த காரியம்